விஜய் தொலைக்காட்சியில் வெளியான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகுந்த பிரபலமடைந்த அஸ்வின்குமார், முன்னதாக  தமிழில் சில  ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராகவும் சில தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குனர் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,இயக்குனர் மணிரத்னத்தின் ஓகே கண்மணி ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஸ்வின்குமார். விஜய் தொலைக்காட்சியின் ரெட்டைவால் குருவி ,ஆபீஸ் போன்ற தொடர்களில் நடித்த அஷ்வின், இயக்குநர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழில் பல குறும்படங்கள், ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அஸ்வின் குமார் நடித்து லோனர் என்ற புதிய ஆல்பம் பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. தனிமையின் வலிகள் குறித்து  வெளிவந்துள்ள இந்த லோனர் ஆல்பம் பாடல்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

AdyKriz  இசையமைத்து இயக்கியுள்ள இந்தப் பாடலின் வரிகளை மோகன் ராஜன் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு சுபாஷ்  ஒளிப்பதிவில் இந்த ஆல்பம் பாடலின் வீடியோ காட்சி மிக அழகாக இருக்கிறது. அஸ்வின் குமார் நடித்து வெளிவந்த குட்டி பட்டாசு, கிரிமினல் க்ரஷ்  ஆகிய ஆல்பம் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லோனர் ஆல்பம் பாடலும் தற்போது வெளியான உடனே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் இந்தப் பாடலும் ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.