நடிகர் ஆதி,நடிகை நிக்கி கல்ராணி காளி வெங்கட், அருண் ராஜா காமராஜ் ,முனீஸ்காந்த், ஆனந்தராஜ், M.S.பாஸ்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்து காமெடியில் கலக்கி சூப்பர் ஹிட்டான மரகத நாணயம் திரைப்படம் ஃபேண்டசி காமெடி திரைப்படமாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

super hit tamil comedy fantasy movie maragatha naanayam part 2 coming soon

இயக்குனர் ARK.சரவணன் எழுதி இயக்கிய மரகதநாணயம் திரைப்படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருந்தார்.PV.சங்கர் ஒளிப்பதிவு செய்ய AXESS  பிலிம் பேக்டரி சார்பில் G.டில்லி பாபு தயாரித்த மரகத நாணயம் திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. மரகதநாணயம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அத்திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று ட்விட்டர் ஸ்பேஸில்  மரகதநாணயம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் டில்லிபாபு தெரிவித்துள்ளார். 

நகைச்சுவையில் ரசிகர்கள் மனதை கவர்ந்த மரகதநாணயம் திரைப்படத்தின் 2வது  பாகம் விரைவில் தயாராக உள்ளதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மரகத நாணயம் பார்ட் 2 படத்தில்  பணியாற்றவுள்ள நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.