தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியான நேரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானவர் அஞ்சு குரியன் ,மலையாள சினிமாவில் 2 பெண்குட்டிகள், ஞான் பிரகாஷன்  நடித்துள்ளார். 

மேலும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அஞ்சு குரியன் தமிழில் வெளியான இஃக்லூ  சென்னை 2 சிங்கப்பூர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் மாபெரும் வெற்றியடைந்த மலையாள திரைப்படமான பிரேமம் திரைப்படத்திலும் அஞ்சு குரியன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த  நிவின் பாலியின் தங்கையாக நடித்திருந்தார்.  சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன் தற்போது ரத்தம் சொட்டும் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார். சமையலறையில் சமைக்கும் பொழுது சமையல் கத்தி கைவிரலை நறுக்கியது. அதில் கசிந்த அந்த ரத்தத்தோடு இருக்கும் விரலின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 

மேலும் தொடர்ந்து  மருத்துவமனையில் அந்த காயத்திற்கு கட்டு போட்டுள்ள புகைப்படத்தையும்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். கைவிரல்கள் அறுக்கப்பட்டு ரத்தம் கசியும் புகைப்படத்தை பதிவேற்றிய அஞ்சு குரியனின் புகைப்படங்கள்  இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.