தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் நடிகர் சிலம்பரசன். காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கிய நடிகர் சிலம்பரசன் தொடர்ந்து குத்து, மன்மதன், கோவில், வல்லவன், வானம் , விண்ணைத்தாண்டி வருவாயா, செக்கச்சிவந்த வானம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடைசியாக கடந்த ஜனவரி மாதம்  நடிகர் சிலம்பரசன் நடித்து வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் மாநாடு திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. ஈஸ்வரன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் சமீபத்தில் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட ஒரு சாதனையை படைத்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகர் சிலம்பரசன் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிலம்பரசன்  இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நடிகர் சிலம்பரசன்  ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர் எஸ் ஜே சூர்யா நடிகை கல்யாணி பிரியதர்ஷினி நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.