மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரைப்படங்களுக்கு திரைப்படம் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து தமிழ் சினிமாவில்  தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் விஜய்  சேதுபதியின்  நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயார் நிலையில் உள்ளன. மற்றும் சில திரைப்படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. 

இந்த உயரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி அவ்வளவு எளிதில் வரவில்லை. ஆரம்ப காலத்தில் சில திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நின்று வந்த விஜய் சேதுபதி இப்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திற்கு முன் ஒரு தலைவனாக மக்கள் செலல்வனாக நிற்கிறார்கள். விஜய்சேதுபதியின் எளிமையான பேச்சும் எதார்த்தமான குணமும் அனைவரையும் அவர் பக்கம் ஈர்த்து விடும். 

தமிழில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கு, மலையாள சினிமாக்களிலும் காலடி எடுத்து வைத்துள்ள விஜய் சேதுபதி, சில மாதங்களுக்கு முன்பு மலையாள சினிமாவில் 19(1)(a)  என்ற திரைப்படத்தில் நடிகர் இந்திரஜித் சுகுமாரன் உடன் இணைந்து பணியாற்றினார். அந்த படப்பிடிப்பின்போது கேரளாவில் உள்ள ஒரு தோட்டத்தில்  நடிகர் விஜய் சேதுபதி மாங்காய் பறிக்கும் ஒரு வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக படப்பிடிப்பு நடைபெற்ற போது இந்த வீடியோ காட்சியின் ஒரு புகைப்படம் மட்டும் வெளியான நிலையில் அந்த வீடியோ காட்சி தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஒரு நடிகராக திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வெற்றிப்பயணம் மலையாளத்திலும் தொடரும் என  வாழ்த்துவோம்.