தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன்.ஹிந்தியில் லக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.7ஆம் அறிவு,3,புலி,வேதாளம் என்று முக்கிய ஹீரோக்களுடன் நடித்து ஹிட் நாயகியாக திகழ்ந்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

அடுத்ததாக விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஹிந்தியிலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.இவரது லாபம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஸ்ருதிஹாசனின் ஹிந்தி படமான யாரா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடித்த கிராக் என்ற தெலுங்கு படம் பொங்கலை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது படங்களையும்,வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.சமீபத்தில் ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார் ஸ்ருதி,அதில் ரசிகர் ஒருவர் ஏடாகூடமாக கேள்விகேட்க அதற்கும் கூலாக பதில் சொல்லியுள்ளார் ஸ்ருதி.இவரது இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

shruti hassan smart reply to a fan in instagram krack labam