தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக -  திமுக வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதும் தொகுதிகள் எவை என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம். 

தமிழக அரசியல் களம் தற்போது அனல் பறந்துகொண்டு இருக்கிறது. அதன் படி, தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், இந்த சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அதிமுக - திமுக வேட்பாளர்கள் தொகுதியில் மட்டும் சற்று கூடுதலாக அனல் வீசத் தொடங்கி இருக்கிறது. 

இதில், 14 தொகுதிகளில் பாஜகவை நேரடியாக எதிர்த்து களம் காண்கிறது திமுக. 

தமிழக அரசியலில் நேர் எதிர் கட்சியாக பார்க்கப்படும் அதிமுக - திமுக என இரு கட்சிகளும் கிட்டத்தட்ட 19 இடங்களில் நேருக்கு நேர் மோதுகின்றன.

கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதே போல், அதிமுக கூட்டணியில் 50
தொகுதிகள் கூட்டணி கட்சிககு ஓதுக்கியது போக, கிட்டத்தட்ட 178 தொகுதிகளில் அதிமுக போட்டியிருக்கிறது. இப்படியான நிலையில் தான், அதிமுக - திமுகஎன இரு கட்சிகளும் கிட்டத்தட்ட 19 இடங்களில் நேருக்கு நேர் தேர்தலில் களம் காண்கின்றன.

அதன் படி,

- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் சம்பத் குமார் போட்டியிடுகிறார். 

- துணை முதலமைச்சரும் அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து, போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். 

- கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

- அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து, சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுகிறார்.

- சேப்பாக்கம் தொகுதியில் பாமாக (அதிமுக+) வேட்பாளர் கசாலியை எதிர்த்து, திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

- சென்னை ஆலந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பா.வளர்மதியை எதிர்த்து, திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் போட்டியிடுகிறார்.

- சென்னை அண்ணா நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை எதிர்த்து, திமுக வேட்பாளர் மோகன் போட்டியிடுகிறார்.

- சென்னை ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் மாஃபா. பாண்டியராஜனை எதிர்த்து. திமுக வேட்பாளர் நாசர் போட்டியிடுகிறார்.

- காட்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராமுவை எதிர்த்து, திமுக வேட்பாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

- விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து, திமுக வேட்பாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.

- கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.

- விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை, எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன் போட்டியிடுகிறார்.

- கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து, திமுக வேட்பாளர் மணிமாறன் போட்டியிடுகிறார்.

- வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை எதிர்த்து, திமுக வேட்பாளர் முருகன் போட்டியிடுகிறார். 

- பவானி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கண்ணப்பனை எதிர்த்து, திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் போட்டியிடுகிறார்.

- தொண்டாமுத்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனதிபதி போட்டியிடுகிறார்.

- மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவை எதிர்த்து, திமுக வேட்பாளர் சின்னம்மாள் போட்டியிடுகிறார்.

- நன்னிலம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமரஜை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜோதிராமன் போட்டியிடுகிறார்.

- ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரபாலாஜி எதிர்த்து, திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.