“ராசி பலன்கள் பரிகாரங்கள் பொதுவாக எல்லாருக்கும் பலிப்பதில்லை ஏன்?” என்பது குறித்து பிரபைல ஜோதிடர் க.காந்தி முருகேஷ்வரர் விளக்கம் அளித்துள்ளார்.

“கஷ்டத்தில் உளண்டு கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவரும் வருகிற குரு பெயர்ச்சி, வரும் சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பெயர்ச்சி நம் வாழ்க்கையை மாற்றி அமைத்து விடாதா என்று ஏங்கி நல்ல எதிர்காலத்தை எதிர் பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். 

அதே போல், எந்த கடவுளாவது நம் பிரச்சனை அத்தனையும் தீர்த்து வைக்கதா? என வேண்டி ஜோதிடர்கள் சொல்கிற கோவில்களுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளோர் "அந்த கோவிலுக்கு போனேன் கஷ்டம் போச்சு, இந்த கோவிலுக்கு போனேன் பிரச்சனை எதுவும் எனக்கு வரலை" என சொல்லுகிற வார்த்தைகளை கேட்டு நம்பிக்கையுடன் சென்று வழிபட்டு வருகிறார்கள். 

சிலர் எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமும் தொடர் தோல்விகளால், காரணம் புரியாமல், எதிரிகள், துரோகிகளால் வைத்த செய்வினை, பில்லி சூன்யத்தால் தான் நமக்கு கஷ்டமோ என எண்ணி, எதாவது செய்து கஷ்டத்தை தீர்த்தால் போதும் என கேள்விப்படுகிற அத்தனையும் முயற்சி செய்து சிலர் வெற்றி பெற்றதாகவும், பலர் தோல்வி அடைந்ததாகவும் சொல்கிறார்கள்.

கிரக பெயர்ச்சி ஏற்பட்டதும் ஒரே ராசிக்காரர்களில் சிலருக்கு ஜோதிடர்கள் சொன்னதில் நல்ல பலனும், சிலருக்கு அதிக கஷ்டத்தையும் தந்துவிடுகிறது. இதனால் வெறுத்து போய் ஜோதிடம் பொய், பிரார்த்தனை பொய், கடவுள் பொய், பரிகாரங்கள் பொய் என விரக்தியான மனநிலைக்கு சென்று விடுகின்றனர்.

இன்றைய தலைமுறையினரிடம் வெகுவாக ஒரு வியாதி தற்போது பரவி வருகிறது. எப்போதும் "பாசிடிவ் தாட்ஸ்" ஆக பேச வேண்டுமாம். முடியாது, நடக்காது என்கிற வார்த்தைகளை கேட்டால் இரிடேட் ஆகி, டிபிரஸ் ஆகி விடுகிறார்களாம். 

இப்படி பேசுபவர்கள் டேஞ்சர் ஆனவர்கள். பூமியில் வாழ தகுதியில்லா அர வேக்காடுகள். முதலில் தாய் மொழி தமிழை சரியாக எழுத படிக்க தெரியாதவர்கள். தங்கிலிஸ் பேசும் அதிஷ்டத்தை நம்புபவர்கள். பாசிடிவ் வைப், பாசிட்டிவ் மனிதர்களிடம் பேசினால் தான் நல்லது நடக்கும் என நம்புகிற பைத்தியங்கள் அதிகமாகிவிட்டனர்.

பொதுவாக ஜோதிடர்கள் ஜாதகத்தில் இருக்கும் கெட்ட பலன்கள் சொன்னால் சராசரி மக்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார்கள். ஆதலால், உண்மையில் கெட்ட பலன்கள் இருந்தாலும் பய முறுத்தாமல், ஜோதிடர்கள் நம்பிக்கை கொடுக்க வேண்டும். வாக்கு ஸ்தானம் ஜோதிடர்களுக்கு அதிகம் இருப்பதால் கெடு பலன்கள் சொல்வதை தவிர்த்து, "நல்ல காலம் சீக்கிரம் வந்துவிடும்" என சொல்லி ஊக்கம் தர வேண்டும். 

எதிர்மறை எண்ணங்களால் பலர் விரக்தி அடையகூடும். ஆதலால், நேர்மறை 
எண்ணங்களை மக்களுக்கு ஜோதிடர்கள் விதைக்க வேண்டும். 

ஜோதிடம் என்பது நம்பிக்கை சார்ந்தது. விதியை மாற்றும் வல்லமை கடவுளுக்கு உண்டு என்றும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை.  விதியை மதியால் வெல்லலாம் இப்படியெல்லாம் சொல்லி நம்பி வரும் வாடிக்கையாளர்களை வாழ வழிகாட்டி, நோகடிக்காமல் பலன் சொல்ல வேண்டும் என தத்துவம் பேசி உண்மையை சொல்லவிடாமல் தடுத்து விட்டு, யார் எப்படி சொன்னா என்ன ஜோதிடர்கள் உண்மையை வெளிப்படையாக சொன்னால் எச்சரிக்கையாக இருந்திருப்போமே என ஆதங்கப்படுபவர்களும் உண்டு. 

ஜோதிடர்கள் மனம் புண்பட கூடாதென்று பலனை பதமாக சொல்வார்கள் என்பதை மக்களும் அறிவர்.

அதே வேளையில், ஜோதிடத்தை மதம் சார்ந்ததாக எண்ணும் சிலர், எதாவது குறை கிடைத்தால் அதை சொல்லி சந்தோசப்படும் மன நோயாளி கூட்டமாகவும் 
இருக்கிறார்கள். தற்சமயம் கொரோனோ வந்து விட்டது. எந்த ஜோதிடரும் சொல்லவில்லை என பேச தொடங்கிய கூட்டத்திற்கு விகாரி வருஷ பஞ்சாங்கத்தில் முன்பே கணித்த பக்கங்களை காட்டினாலும் கண்டு கொள்ளாமல் பேசுகிறார்கள். 

வெளிநாடுகளில் இப்படி ஏதாவது சிறிய குறிப்பு இருந்திருந்தால் கூட இன்று அதை பெரிதாய் பேசி உலகம் முழுதும் வியாபாரமாக்கி பணம் பார்த்திருப்பர். அன்றே சொன்ன ஆங்கிலேயே அறிஞர்கள் என சொல்லி தமிழர் அறிவை மட்டமாக பேச விரும்பும் தமிழ் போராளிகள் தான் தமிழகத்தில் அதிகம்”  என்று கூறுகிறார் பிரபைல ஜோதிடர் க.காந்தி முருகேஷ்வரர்.
 
                                                                                                                                                      - தொடரும்