தமிழகத்தில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ள நிலையில், முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்ன? 2 ஆம் வகை மாவட்டங்களில் எதற்கெல்லாம் அனுமதி? என்பது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம். 

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொற்று படிப்படியாகச் சற்று குறைந்து உள்ள நிலையில், கொரோனா மேலும் பரவாமல் தடுக்கும் வகையிலும், ஏற்கனவே உள்ள ஊரடங்கை மேலும் ஒரு சில தளர்வுகளோடு வரும் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. 

அதன் படி, தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்கள் கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில், கடந்த வாரம் 3 வகையாகப் பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிக்கப்பட்டன. தற்போதும், அந்த 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையிலேயே தமிழக அரசு சில தளர்வுளை அளித்து உள்ளது.

முதல் வகையில் 11 மாவட்டங்கள் - குறைவான தளவுர்கள்

அதன் படி, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இந்த முதல் வகையில் இடம் பெற்று உள்ளன. முதல் வகையில் உள்ள 11 மாவட்டங்களுக்கு மிகவும் குறைந்த அளவிலான தளர்வுகளே அறிவிக்கப்பட்டு உள்ளன.

- அனைத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வீட்டு வசதி நிறுவனம், வங்கிசாரா நிறுவனங்கள், குறுநிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- ஐ.டி., ஐ.டி. சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- இதர தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- மின்பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திர பழுதுநீக்குவோர், தச்சர் ஆகியோர் வீடுகளுக்கு சென்று பணியாற்ற இபதிவின்றி அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- தனியார் பாதுகாப்பு சேவை மற்றும் அலுவலகங்கள், வீடுகள் பராமரிப்பு சேவை இபதிவின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

- திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ பாஸ், இ பதிவு இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- அனைத்து கடற்கரைகளிலும் காலை 5 மணி முதல் 9 வரை நடைபயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஏசி வசதியின்றி 50 சதவீத நபர்களுடன் செயல்படலாம் என்றும், அனுமதிக்கப்பட்டு உள்ளது.

2 ஆம் வகையில் உள்ள 23 மாவட்டங்கள் - கூடுதல் தளர்வுகள்

அதன் படி அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த 23 மாவட்டங்களக்கும் தற்போது கூடுதலான தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன.

- மாவட்டத்திற்குள் பொதுப் பேருந்து போக்குவரத்திற்கு 50 சதவீத பயணிகளுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- மாவட்டங்களுக்கு இடையே விதிகளுக்குட்பட்டு 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- பாத்திரக்கடைகள், ஃபேன்சி, அழகு சாதனப் பொருள், ஃபோட்டோ, வீடியோ கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- கட்டுமானப் பணிகளை 50 சதவீத பணியாளர்களுடன் மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

- கணினி, மின்னணு சாதன உதிரிபாக கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 வரை செயல்படலாம் என்றும், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- செல்பேசி மற்றும் அது சார்ந்த கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

3 ஆம் வகையில் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் - அதிக தளர்வுகள்

- பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட வழங்கப்பட்டு உள்ளது.

- கட்டுமான நிறுவனங்கள் 33 சதவீத தொழிலாளர்களுடன் செயல்பட வழங்கப்பட்டு உள்ளது. 

- இதர தொழிற்சாலைகள் 33 சதவீத தொழிலாளர்களுடனும், ஐ.டி.சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- தனியார் நிறுவனங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் 50 சதவீத ஊழியர்களுடனும், அரசின் அத்தியாவசிய துறைகள் 10 சதவீதம், இதர துறைகள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- வாகன விற்பனை, பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 7 வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- பாத்திரக் கடைகள், ஃபேன்சி கடைகள், அழகுசாதன கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 வரை அனுமதி அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- கட்டுமான பொருட்கள், காலணி கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அமதிக்கப்பட்டு உள்ளது. 

- முக்கியமாக சாலையோர உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- கணினி, மென்பொருள்கள், மின்னணு சாதனக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி பெற்று வாரத்தில் ஒருநாள் பராமரிப்பு பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- இனிப்பு, கார வகை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல், இரவு 9 மணி வரை செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6 மணி முதல் 9 வரை மட்டும் நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- வாகன உதிரிபாகம், செல்பேசி விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- கல்விப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 வரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 

- ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.