பிரிட்டனில் மாமியாரை அதிகாரப்பூர்வமாக மருமகன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வைரலாகி வருகிறது. 

வரலாற்றில் சில விசயங்கள் மட்டுமே அரிதாக நடைபெறும். அப்படி நடைபெறும் சம்பவங்களை இந்த உலகமே திரும்பிப் பார்ப்பது வழக்கும். இது, நல்ல நல்ல விசயங்களுக்குப் பொருந்தும். அதே நேரத்தில், தீய விசயங்களில் கூட அனைவரையும் சில நேரங்களில் சிலர் திரும்பிப் பார்க்க வைத்து விடுகின்றனர்.

ஆனால், சிலரோ, சமூகத்தில் நடைமுறையில் இருக்கக்கூடிய விசயங்களை அப்படியே தலை கீழாகச் செயல்படுத்தி, அல்லது செய்து காட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்வது உண்டு. அப்படியான ஒரு விசயம் தான் தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுள்ளது.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Clive Blunden என்ற நபர், அதே பகுதியைச் சேர்ந்த லேர்னி லிட்டில் என்ற இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே சென்றது. இதனையடுத்து, அவர்களுக்கு அடுத்தடுத்து 2 குழந்தைகள் பிறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை இப்படி மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நேரத்தில், திடீரென்று அவர்களது வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது.

கணவன் - மனைவி இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவருக்குள்ளும் கருத்து யுத்தம் அதிகமாகவே, அவர்கள் இருவரும் முறைப்படி நீதிமன்றம் சென்று, கடந்த 1989 ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றனர். அதே நேரத்தில், அவர்களுடைய இரு குழந்தைகளும் தாயாரின் பராமரிப்பிலேயே இருக்க வேண்டும் என்றும், ஆனால் அந்த குழந்தைகளைக் காண தந்தைக்கு அனுமதி உண்டு என்றும், அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, லேர்னி லிட்டில் தனது இரு குழந்தைகளுடன், தனது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்குச் சென்ற பிறகு, குழந்தைகளைப் பராமரிக்கப் பணம் வேண்டும் என்பதால், இரு குழந்தைகளையும் தனது அம்மாவை கவனிக்கச் சொல்லிவிட்டு அவர் வேலைக்குச் சென்று வந்தார்.

அப்போது, கணவன் Clive Blunden, தனது இரு குழந்தைகளையும் பார்க்க தன் மனைவியின் அம்மா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்படி, குழந்தைகளைப் பார்க்க வந்து சென்று, குழந்தைகளைக் கொஞ்சும் தருணத்தில் மாமியார் மீது மருமகனுக்கும், மருமகன் மீது மாமியாருக்கும் இடையே ஈர்ப்பு வந்து அது காதலாக மாறி உள்ளது.

இதன் காரணமாக, மாமியாரும் - மருமகனும் ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழத் தொடங்கினர். இதனால், அம்மா மீது கடும் கோபம் அடைந்த அவர் மகள் லேர்னி லிட்டில், அவரிடம் சண்டை போட்டு விட்டு தன் இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியாகச் சென்று விட்டார். இது தொடர்பாகத் தனது முன்னாள் கணவனிடமும் லேர்னி லிட்டில் சண்டை போட்டதாகத் தெரிகிறது. ஆனால், மாமியாரும் - மருமகனும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தொடர்ந்து சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

அதன்படி, மாமியாரும் - மருமகனும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 1997 ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அப்போது, இது அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கும், பண்பாட்டுக்கும் எதிரான செயல் என்று, Clive Blunden னை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். 

அந்நாட்டின் விதிகளின் படி, “மாமியாரை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்பதும், அதற்காக அந்நாட்டில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை” விதிக்கப்படும் அங்கு சட்டமாகவே உள்ளது. இது தொடர்பாக போலீசார் Clive Blunden னை எச்சரித்த நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்யாமல், ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். 

அத்துடன், Clive Blunden இந்த சட்டத்திற்கு எதிராகக் கடுமையாகப் போராடி வந்தார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த சட்டம் முறைப்படி மாற்றியமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தனது மாமியார் பிரண்டாவை, மருமகன் Clive Blunden முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

மாமியாரை, மருமகன் திருமணம் செய்துகொண்டது தொடர்பாக கருத்து தெரிவித்த  பிரண்டாவின் மகளும், Clive Blunden னின் முன்னாள் மனைவியுமான லேர்னி லிட்டில், “எனக்கு அம்மா யார் என்றே தெரியாது என்றும், தனது அம்மா எனக்குச் செய்த துரோகத்தை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்” என்றும், ஆவேசமாக அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, இங்கிலாந்தின் சட்ட திட்ட விதிகளின் படி, கடந்த 500 ஆண்டுகளில் மாமியாரை அதிகாரப்பூர்வமாக மணந்த ஒரே மருமகன் என்கிற பெருமையையும் Clive Blunden அந்நாட்டில் பெற்றுள்ளது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.