நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில நாட்களாக கோவாவில் தங்கள் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். அதன் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்ட நிலையில் இணையத்தில் அவை அதிகம் வைரலாகி இருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பு நயன்தாராவின் அம்மா பிறந்தநாளை அவர்கள் கோவாவில் கொண்டாடிய நிலையில் சென்ற 18-ம் தேதி விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டுவதற்காக நயன்தாரா ஸ்பெஷல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து பெரிய அளவில் கொண்டாடினார்.

அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது. 3 பிரம்மாண்ட கேக் விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா வாங்கியிருக்கிறார். அதில் ஒன்றில் அவர் இயக்குனர் என்பதை குறிப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. மற்றொன்று மூன்றடுக்கு ஸ்பெஷல் கேக். அது மட்டுமின்றி பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த இடத்தில் லைவ் மியூசிக் உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நயன்தாரா செய்திருக்கும் இந்த சர்ப்ரைஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள் அந்த வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்து ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தங்கள் கோவா ட்ரிப் முடித்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள். அவர்கள் பிரைவேட் ஜெட் ஒன்றில் சென்னை வந்திறங்கிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. விமானத்திலிருந்து ஜோடியாக கைகோர்த்து அவர்கள் இருவரும் இறங்கி வருகிறார்கள்.

அது மட்டுமின்றி நயன்தாரா அணிந்திருக்கும் டி-சர்ட்டில் எழுதப்பட்டிருக்கும் விஷயமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமீபகாலமாக டி-சர்ட்டில் இடம்பெற்றிருக்கும் வாசகம் ட்ரெண்டாகி இருந்ததல்லவா. அதை மறக்காத ரசிகர்கள் நயன்தாராவின் காஸ்டியூம் சென்ஸை கவனித்து வருகின்றனர். This is a graphic tee என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கொச்சிக்கு சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா தற்போது தனி விமானத்தில் செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டு பலரும் அவரை பாராட்டினார்கள். தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக அவர் கேரளாவில் இருந்து முதல் முறையாக இங்கு வந்த போது அவர் அரசு பேருந்தில் தான் வந்தார் என்றும், தற்போது தனி விமானத்தில் செல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது.

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்திலும் நடித்து வந்தார் நயன்தாரா. அந்த படத்தின் 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், குஷ்பு என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகவுள்ளது. விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கவுள்ளனர். காதலர் தினத்தன்று இதன் அறிவிப்பு வெளியானது. விரைவில் அதன் ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.