ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் துப்பாக்கி முனையில் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கடத்தல் 
சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்ட உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில், கிரிக்கெட் உலகில் மிகவும் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். 

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மெக்கில், கடந்த 1998 முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 4 டெஸ்ட்போட்டிகளில் விளையாடிய மெக்கில். 208 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 

ஷேன் வார்னேவுக்கு அடுத்தாற்போல் ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மெக்கில் இடம் பிடித்திருக்கிறார்.

இதனையடுத்து, வயது மூப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட்டிலவ் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தனது குடும்பத்தினருடன், தனது கடைசிக் காலங்களை வாழ்ந்துகொண்டு இருந்தார்.

இப்படியான நிலையில் தான், சிட்னியில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த மாதம் 14 ஆம் தேதி அவர் நடந்து சென்றுக்கிறார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் கொண்ட கும்பல், முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று உள்ளனர்.

அதே சிட்னி நகரில் உள்ள வேறு ஒரு இடத்துக்கு மெக்கில்லை கடத்திச் சென்ற அந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரைத் தாக்கி மிரட்டி உள்ளனர். கிட்டதட்ட ஒரு மணிநேரம் மெக்கில்லை மிக கடுமையாகத் தாக்கிவிட்டு, அவரை பெல்மோர் எனும் பகுதியில் இறக்கவிட்டு தப்பிச் சென்று உள்ளனர்.

இதனையடுத்து, “தன்னைக் கடத்தி தாக்கிய மர்ம நபர்கள் குறித்து, அங்குள்ள நியூ சவுத்வேல்ஸ் போலீசில்” மெக்கில் புகார் அளித்தார். இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அந்த 4 பேரையும் போலீசார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

இது தொடர்பாக அங்குள்ள நியூ சவுத்வேல்ஸ் போலீஸ் அதிகாரி அந்தோணி ஹால்டர் கூறும் போது, “கடந்த 14 ஆம் தேதி ஸ்டூவர்ட் மெக்கில், தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, காரில் வந்த 4 பேர் அவரைக் கடத்திச் சென்று, பிரிங்லிபகுதிக்குக் கொண்டு சென்று தாக்கி உள்ளனர்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “அவரை அந்த 4 பேரும் துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளனர்” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“அதன் பிறகு, ஒரு மணிநேரத்துக்குப் பிறகே பெல்மோர் பகுதியில் அவரை இறக்கிவிட்டு அந்த 4 பேரும் தப்பிச் சென்று விட்டனர் என்றும், பணத்துக்காக இந்த கடத்தல் நடந்திருக்கலாம்” என்றும், அவர் கூறினார். 

“இந்த கடத்தல் விவகாரம் குறித்து எங்களுக்கு கடந்த 20 ஆம் தேதி தான் புகார் அளிக்கப்பட்டது என்றும், அதன் பிறகு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது என்றும், அந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை மிக தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் இன்று கைது செய்யப்பட்டு உள்ளனர்” என்றும், தெரிவித்தார். இச்சம்பவம், அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.