பாலிவுட் திரை உலகில் வசூல் மன்னனாக திகழ்கிறார் சல்மான்கான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சல்மான் கான். ஒவ்வொரு முறை சல்மான்கானின் திரைப்படம் வெளிவரும் போதும் அது படைக்கும் வசூல் சாதனைகள் பாலிவுட் திரை உலகம் கண்டிராத சாதனைகளாக அமைகின்றன. சல்மான் கான் நடித்த தபாங் சீரீஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடைசியாக வெளிவந்த தபாங் 3 திரைப்படத்தை பிரபுதேவா இயக்கி இருந்தார். 

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான பிரபுதேவா நடிகராகவும் இயக்குனராகவும் பல பரிமாணங்களில்  இந்திய சினிமா முழுக்க பிரபலம் அடைந்துள்ளார். தமிழில் இளைய தளபதி விஜயுடன் இணைந்து அவர் இயக்கிய போக்கிரி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அதே படத்தின் இந்தி ரீமேக்கான வான்டட் திரைப்படம் பாலிவுட்டில் மெகா  ஹிட்டடித்தது. தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான ரவுடி ரத்தோர் திரைப்படம் மூலமாக அறிமுகமான பிரபுதேவா இந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து இந்தியில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்கிறார்.  தபாங் 3  திரைப்படத்தில் மீண்டும் பிரபுதேவாவும் சல்மான்கானும் இணைந்து பணியாற்றினர்.

salman khans radhe title track is out now

தபாங் 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் செய்தது. 

இந்நிலையில் மீண்டும் பிரபுதேவாவும் சல்மான்கானுடன் இணையும் ராதே   திரைப்படம் இந்த வருடம் வெளியாக தயாராக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இருந்து இந்த திரைப்படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் யூ டியூபில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த டைட்டில் ட்ராக் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்  பெற்றுள்ள நிலையில் ராதே திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.