விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

அப்படி விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பாகி அனைவரையும் கவர்ந்த சூப்பர்ஹிட் நிகழ்ச்சி முரட்டு சிங்கிள்ஸ்.இளைஞர்களை கவரும் வகையில் இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக அமைக்கப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தற்போது பிரபலன்களாக மாறியுள்ளனர்.இந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் பைனல் போட்டி ஒளிபரப்பாகிறது.இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவுக்கு வருவது அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.