1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடராக இந்த தொடர் இருந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடித்து வந்தார்.சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது,இதனை தொடர்ந்து இந்த தொடரில் நடித்து வந்த பொன்வண்ணன்,நிகிலா,ஷில்பா உள்ளிட்ட சில முக்கிய கேரக்டேர்கள் சில காரணங்களால் மாற்றப்பட்டனர்.

ப்ரீத்தி ஷர்மா,நந்தன் லோகநாதன்,மீரா கிருஷ்ணன்,மஹாலக்ஷ்மி இந்த தொடரின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்து வருகின்றனர்.பொன்வண்ணன் கேரக்டரில் நிழல்கள் ரவி நடிக்கிறார்,நிகிலா ராவ் நடித்து  கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் நடிக்கிறார்,ஷில்பா நடித்து வந்த கதாபாத்திரத்தில் ஜெயலட்சுமி நடிக்கிறார்.

இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.இந்த தொடரில் இருந்தும் சீரியல் நடிப்பில் இருந்தும் வெளியேறுவதாக ராதிகா கடந்த மாதம் திடிரென முடிவெடுத்தார்.ராதிகா இல்லாமல் இந்த தொடரின் விறுவிறுப்பு குறையாமல் சீரியல் குழுவினர் பார்த்துக்கொண்டனர்.தற்போது இந்த தொடரில் நடித்து மீரா கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னுடைய ஐடியை பலரும் நடிகை  மீராகிருஷ்ணனின் ஐடி என்று நினைத்து பேசி வருகிறார்கள் அது நான் இல்லை என்று அவர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

chithi 2 meera krishna statement to fans about confusing with meera krishnan