கடந்த வருடம் இருந்த ஊரடங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக கடந்திருக்கும் .ஆனால் நெட்ப்ளிக்ஸ் ரசிகர்களுக்கு   MONEY HEIST வெப்சீரிஸ்-ல் கடந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்பெயினில் உருவாக்கப்பட்ட MONEY HEIST என்னும்  இந்தத் தொடரை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மொத்த உரிமமும் பெற்று 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிட்டது.முதல் பாகத்தில் 22 எபிசோடுகள் இருந்த நிலையில் தொடர்ந்து இதன் நான்கு பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகின. 

actor alvaromote leaves from the sets of money heist

உலகம் முழுக்க மிகவும் பிரபலமான இந்த வெப்சீரிஸ் கடந்த வருடம் இந்தியாவில் முழு ஊரடங்கு போடபட்டபோது  இந்திய ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது , பார்க்கப்பட்டது.  ஸ்பெயின் நாட்டில் அந்நாட்டு பணத்தை அச்சடிக்கும் ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயினை கொள்ளையடிக்க,  மிகவும் அறிவாளியான ஒரு Professor-இன் தலைமையிலான ஒரு கும்பல்  திட்டம் தீட்டி கொள்ளையடிப்பது MONEY HEIST வெப்சீரிஸ்-இன் மூலக்கதை. 

கதையில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் டோக்கியோ ,மாஸ்கோ, ரியோ ,நைரோபி என உலகில் இருக்கும் பெரிய நகரங்களின்  பெயர்கள் சூட்டப்பட்டு இருக்கிறது . இதுவரை வெளிவந்த நான்கு பாகங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில் இதனுடைய ஐந்தாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு எபிசோடும் அதில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மிகவும் சுவாரசியமாகவும் த்ரில்லாகவும் பரபரப்பாகவும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஒவ்வொரு பாகத்தின் முடிவும் அடுத்து என்ன ஆகுமோ என்ற  மிகப்பெரிய எதிர்பார்ப்போடு முடிகிறது. 

சில மாதங்களாக படப்பிடிப்பில் இருந்த MONEY HEIST குழு தற்போது படப்பிடிப்பை முடித்துள்ள  தகவல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த வெப்சீரிஸ்-இல் முக்கிய கதாபாத்திரமான Professor கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் Alvaromorte அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், 

“அனைவருக்கும் நன்றி முதலில் ரசிகர்களுக்கு நன்றி  ஒட்டுமொத்த தயாரிப்பு குழுவுக்கு நன்றி நெட்பிளிக்ஸ்க்கு நன்றி” 

என நன்றி தெரிவித்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Álvaro Morte (@alvaromorte)