தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை கொண்டுவர தலைமை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த குழு மூலம் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களுக்கான புதிய தொழிற்கொள்கை  வெளியிட்டப்பட்டுள்ளது.  


தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க புதிய தொழிற்கொள்கைகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த புதிய தொழிற்கொள்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  28,053 கோடி முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம்  68,775 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இன்று முதல் நாளிலே 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.