திருப்பூர் மாவட்டம் விவசாய பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நெடுங்காலமாக விவசாயிகள் கோரி வந்த மும்முனை மின்சாரத்துக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதனால் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட உள்ளது.


தற்போது விவசாயிகளுக்கு, 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டாலும், வெறும் மூன்று மணிநேரமும், நான்கு மணிநேரமும் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதால் மின்சார பம்புகளை பயன்படுத்தியே தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை இருப்பதாக, இதுவரை வழங்கப்பட்டு வரும் 12 மணிநேரம் மும்முனை மின்சாரம் குறித்து விவசாயிகள் மத்தியில் குற்றசாட்டு இருந்து வந்தது. 


இதனால் 24 மணிநேர மும்முனை மின்சாரத்தை விவசாயிகள் கோரியிருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.