தேமுதிக சார்பில் சென்னை மதுரவாயலில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா பேசும்போது, ‘’ மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில், ‘இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு‘ என்ற வகையில் எல்லா வருடமும் இதை செய்கிறோம். 


 தேமுதிக-வை பொருத்தவரை தேர்தலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். தேமுதிக தேர்தல் பரப்புரையை தொடங்க தயாராக இருக்கிறோம். சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எங்கு இருக்கிறதோ அங்கு வெற்றி நிச்சயம். புத்தாண்டுக்கு பின் செயற்குழு, பொதுக்குழுவிற்கு பிறகு தமிழகம் முழுவதும் தேமுதிகவின் பரப்புரையை ஆரம்பம் ஆகும். அதிமுகவில் இருந்து தேர்தல் பரப்புரைக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஆனாலும் எங்கள் பணியை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.


விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதல் இன்று வரை எம்ஜிஆரை குருவாக ஏற்றவர். தொண்டர்களும் மக்களும் கொடுத்த பட்டம்தான் கருப்பு எம்ஜிஆர். ஆனால் அவர் எப்போதுமே தன்னை கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொண்டது இல்லை. எம்ஜிஆர் காதுகேளாதோர் பள்ளிக்கு கடந்த 25 ஆண்டுகளாக உதவி செய்துவருவது விஜயகாந்த் மட்டுமே. எம்ஜிஆரை உரிமை கொண்டாடுவோர்  எல்லாம் இதுவரை என்ன செய்தார்கள்? என கூறினார்.