முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 96–வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. மீனவரணி சார்பில் சென்னை மெரினா நடுக்குப்பம் மீன்மார்க்கெட் அருகில் மீனவ பெண்களுக்கு அலுமினிய மீன்கூடை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது , இதில் கலந்துக்கொண்டு பேசிய பா.ஜ.க. பொறுப்பாளர் குஷ்பு, ‘’ சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதிக்கு என்னை பொறுப்பாளராக பாஜக நியமித்து இருக்கிறது. இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்பது கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.  யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

ஆனால் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பது தேர்தலில் தான் தெரிய வரும். யார் நல்லது செய்யபோகிறார்? என்று மக்கள் நம்புகிறார்களோ, அவர்களுக்கு தான் வாக்குகளிப்பார்கள். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. பலமாகவும் , மக்கள் ஆதரவும் இருக்கிறது. பா.ஜ.க. ஒரு திறந்த மைதானம். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைப்பவர்கள் மற்றும் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணையலாம்.


 வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்புக்கு ஒன்றுமே தெரியாது என்று கமல்ஹாசன் என்ற கேள்விக்கு,‘  கமல்ஹாசன் எனது நல்ல நண்பர். என்னை திட்டலாம், என்னை அணைத்து கொள்ளலாம், என்னை பற்றி எதை வேண்டும் என்றாலும் சொல்லலாம். கமல்ஹாசனுக்கு அந்த உரிமை இருக்கிறது.

‘அரசியல் களத்தில் நெருங்கிய நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை’, என்று எனது அரசியல் ஆசான் கருணாநிதி எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள தி.மு.க.வுக்கு, கருணாநிதி காலத்தில் இருந்த தி.மு.க.வுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது’’ என்று கூறினார்.