சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறைதண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியது. பல்வேறு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு பிறகு தற்போது சசிகலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் சசிகலாவுடன் கூடவே இருந்ததால் இளவரசிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் உருவான நிலையில், அதை தொடர்ந்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது. இன்று 2-வது முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதனால் இளவரசியும் ,  சிறையில் இருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.