துப்பாக்கி முனையில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீதிலாரி கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், வீட்டில் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து தனியாக இருந்துள்ளார்.

அப்போது, பக்கத்து வீட்டில் இருக்கும் அரவிந்த் என்ற இளைஞர், வெகு நாட்களாக அந்த இளம் பெண் மீது காமவசப்பட்டதாக தெரிகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த இளம் பெண் மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அந்த பக்கத்து வீட்டு நபர் அரவிந்த், யாரிடமோ துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணின் வீட்டில் அத்து மீறி நுழைந்துள்ளான். அப்போது, அந்த இளைஞனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உதவிக்கு ஆட்களை அழைக்கச் சத்தம் போட்டுக் கத்த முயன்றுள்ளார்.

அப்போது, சற்றும் எதிர்பாராத நிலையில், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அந்த பெண்ணை மிக கடுமையாக மிரட்டி உள்ளான். இதனால், பயந்து போன அந்த இளம் பெண், சத்தம் போடாமல் அப்படியே பயந்து போனாள்.

மேலும், துப்பாக்கி முனையில் கடுமையாக மிரட்டிய அந்த இளைஞன், அந்த இளம் பெண்ணை பணிய வைத்துள்ளான். அந்த பெண்ணும், தன்னை இவன் கொன்று விடுவானோ என்ற பயத்திலேயே, அந்த இளைஞன் சொல்வதை எல்லாம் கேட்கத் தொடங்கினார். அதன்படி, அந்த துப்பாக்கி முனையில் வைத்தே அரவிந்த், அந்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

மேலும், இந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னை கொன்று விடுவேன் என்றும், உன் குடும்பமே மிக  மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றும், கடுமையாக எச்சரித்துள்ளான். அதன் பிறகு, அந்த பெண்ணின் வீட்டை விட்டு, அவன் வெளியேறி இருக்கிறான்.

இதனால், இன்னும் பயந்து போன அந்த இளம் பெண், இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் ஆகியும், பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரிடம் இது குறித்து எதுவும் சொல்லாமல், பயத்திலேயே இருந்துள்ளார். மகளின் நடவடிக்கை மற்றும் பயத்தைக் கவனித்த பெற்றோர்கள், இது குறித்து மகளிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, தனக்குப் பக்கத்து வீட்டு அரவிந்தால் நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து, அந்த இளம் பெண் அழுதுகொண்டே எல்லாவற்றையும் கூறி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண்ணின் பெற்றோர், இது குறித்து அங்குள்ள ஜலல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்துள்ளனர். 

அப்போது, அந்த நபர் பாலியல் பலாத்காரத்தின் போது, அந்த பெண்ணை மிக கடுமையாகத் தாக்கி, சித்ரவதை செய்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண்ணுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட அரவிந்தை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.