கல்லூரி மாணவியான என்னை ஆட்டோவில் சென்றபோது, 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக” இளம் பெண் குற்றச்சாட்டிய நிலையில், அது போலியான மெகா நாடகம் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த மெச்சால் காடிகேசர் பகுதியில் கல்லூரி மாணவி ஒருவர், ஏழ்மையின் காரணமாக அங்குள்ள ஒரு மெடிக்கலில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். 

அப்போது, நேற்றைய தினம் பணியில் சற்று நேரம் ஆனதாலும், சரியான நேரத்திற்குப் பேருந்தும் கிடைக்காத சூழ்நிலையில், அந்த கல்லூரி மாணவி இனியும் தாமதிக்க வேண்டாம் என்று, அந்த மாணவி அங்கு வந்த ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார் என்றும், ஆனால் அந்த மாணவி ஆட்டோவில் ஏறிய சிறிது நேரத்திலேயே, அந்த மாணவி கூறிய வழித் தடத்தில் செல்வது போல் பயணித்த அந்த ஆட்டோ, அதன் பிறகு அங்கிருந்து மற்றொரு வழித் தடத்தில் பயணித்து, அந்த பெண் கடத்திச் செல்லப்பட்டு 5 பேர் சேர்ந்து அந்த கல்லூரி மாணவியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து மிகவும் கடுமையான முறையில் துன்புறுத்தி உள்ளனர்” என்றும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான அந்த இளம் பெண் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து, அங்கிருந்து நான் இப்போது தப்பி வந்ததாகவும், அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், உடனடியாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன் படி, இந்த வழக்கில் தனிப் படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அந்த பெண்ணை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த 4 பேரை உடனடியாக போலீசார் கைது செய்தனர் என்றும், அத்துடன், இந்த வழக்கில் அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்து கடத்திச் சென்ற முதல் குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநர், தற்போது தலைமறைவாக உள்ளார் என்றும், செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் தான், இந்த வழக்கின் அதிரடி திருப்பமாகக் கல்லூரி மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் போலியானவை என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதாவது, விசாரணையின் போது சில ஆட்டோ டிரைவர்களின் போட்டோக்களை எடுத்து வந்து, அந்த மாணவியிடம் போலீசார் காண்பித்து உள்ளனர். 

அப்போது, ஒரு ஆட்டோ டிரைவரின் புகைப்படத்தை காண்பித்த அந்த பெண், “இவர், என்னை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் ஒருவராக இருந்தார்” என்று, கூறியுள்ளார்.

அந்த ஆட்டோ டிரைவரை அழைத்து வந்து விசாரணை நடத்திய போது, “மாணவி கடத்தல், பாலியல் பலாத்காரம் ஆகியவை நடைபெற்றதாகக் கூறிய சமயத்தில் அவர், தான் ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்ததாகவும், அதன் பிறகு பாருக்கு சென்று மது அருந்தியதாகவும்” கூறியிருக்கிறார். 

இதனால், சற்று சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ஷாப்பிங் மால் மற்றும் பார் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த நபர் கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. 

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, அந்த மாணவி ஆட்டோவை விட்டு இறங்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து, அந்த மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்றைய தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது என்றும், இதற்கான காரணத்தைத் தாயிடம் கூற இயலாத நிலையில், நான் இப்படியாக நாடகம் ஆடினேன்” என்றும், அந்த மாணவி போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இதனால், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.