மகன் திருமணத்தன்று, மருமகள் கர்ப்பமாக இருந்த நிலையில், மாமியாரும் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம் பெண் ஒருவர், தன்னுடைய திருமண நிகழ்வில் நடைபெற்ற விநோதமான மற்றும் மிகவும் கசப்பான அனுபவங்கள் குறித்து Reddit என்கிற இணையதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

தன்னுடைய பெயரை கூற விரும்பாத அந்த இளம் பெண், “என்னுடைய திருமண நிகழ்வு அன்று, எனக்கு மிகவும் சோகமானதாகவும், அதுவே கசப்பானதாகவும் மாறிப்போனதற்குக் காரணம் எனது மாமியார் தான்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து விரிவாகக் கூறியுள்ள அந்த இளம் பெண், “ கொரோனா தொற்று நோய் காரணமாக, மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். அப்படியான முக்கிய உறவினர்கள் முன்னிலையில் தான் எனக்குத் திருமணம் நடந்தது. 

எங்களுடைய திருமணம் மிகவும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே விரும்பினேன். ஆனால், கொரோனா காரணமாக எனது திருமணத்தை மிகவும் எளிமையாகவே நடத்த வேண்டிய சூழல் எனக்கும், எனது குடும்பத்திற்கும் ஏற்பட்டது. அதற்குக் காரணம், எங்கள் திருமணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது தான் மிக முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் திடீரென அறிவிக்கப்பட்டதால், திருமணத்தைத் தள்ளி வைக்க மனம் இல்லாமல், நெருக்கமான சொந்த பந்தங்கள் மட்டுமே கூடி பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் சில சடங்குகளை மட்டும் நடத்தி, அதன் மூலமாக எனது இந்த திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

குறிப்பாக, “எங்களது திருமண நாளில் எனது தந்தையும், மணமகனின் சகோதரரையும் சொந்த பந்தங்கள் முன்னிலையில் பேச வைக்க நாங்கள் ஏற்கனவே பேசி முடிவு செய்திருந்தோம்.

ஆனால், கடைசி நேரத்தில் எனது கணவனின் தாயார் 'நான் ஒரு சில நல்ல விஷயங்களை பேச விரும்புகிறேன்' என்று கூறிக்கொண்டே எழுந்து பேச ஆரம்பித்தார்.

அதன் படி, பேச ஆரம்பித்ததுமே, “இந்த வயதில் நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்” என்று, அறிவித்தார்.

அப்படி, எனது மாமியார் அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கூறிய செய்தி, அங்குக் கூடிய இருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முக்கியமாக, எனக்கு கடும் கோபம் வந்தது.

அப்போது, நான் மணப்பெண்ணாக இருந்ததால், நான் அமைதியாக இருக்க வேண்டிய சூழல் எனக்கு இருந்தது.

அதற்குக் காரணம், எனக்கான திருமண நாள் என்பது எங்களுக்கான நாள் மட்டுமே. மகனுடைய திருமணம் நடந்திருக்கும் அந்த நாளில் ஒரு தாயாக 

இருக்கும் மாமியார், எங்களை வாழ்த்தாமல், அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தியைக் கூறியது எனக்குத் தாங்க முடியாத கோப்பதை ஏற்படுத்தியது. 

அதற்குக் காரணம், அப்போது நானும் கர்ப்பமாக இருந்தேன். அந்த நல்ல நாளில் எங்களுடைய குழந்தை பற்றிய அறிவிப்பை எங்களது உறவினர்களிடம் தெரிவிக்க நானும், என் காதல் கணவரும் காத்திருந்தோம். எங்களுக்கான நாளில் நாங்கள் எங்களது சந்தோசத்தைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது.

எங்கள் திருமண நாளில், என் மாமியார் அனைத்தையும் சொதப்பி வைத்துவிட்டார். திருமணம் முடிந்த பிறகும், 3 நாட்களுக்கு என் மாமியாரிடம் நான் சுத்தமாகப் பேசவே இல்லை. 

எங்கள் திருமணத்திற்கு வந்த உறவினர்களின் கவனத்தை, எங்கள் மீது இல்லாமல், எனது மாமியார் அவர் பக்கம் திருப்பிக்கொண்டது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

அதே நேரத்தில், எங்களுடைய கோபத்தையும் அவரிடம் எங்களால் நேரடியாக காண்பிக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் கர்ப்பமாக இருக்கிறார். 

எது எப்படியோ, என் திருமணத்தன்று, மகிழ்ச்சியான நாள் ஒன்றை என் கோபத்தால், நான் தவற விட்டுவிட்டேன்” என்று, ஆதங்கத்துடன், அந்த இளம் பெண் பகிர்ந்துகொண்டு உள்ளார். இந்த செய்தி தான், இணையத்தில் தற்போது வைரலாகி பேசும் பொருளாகவும் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.