6 மாதங்களாக காதலித்து வந்த பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால், காதலியை விஷ ஊசி போட்டு காதலன் கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நவி மும்பையின் பன்வேல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட தனியார் மருத்துவமனை ஒன்றில், சந்திரகாந்த் கைகார் என்ற இளைஞர் வார்டு பாயாக வேலை பார்த்து வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணை, சந்திரகாந்த் கைகார் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்து உள்ளார். இவர்கள் இருவரும், அந்த பகுதியின் பல்வேறு இடங்களுக்கு சென்று, உல்லாசமக ஊர் சுற்றி பொழுதை போக்கி காதலர்களாக வலம் வந்து, தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

அதன் படி, அவர்கள் தனிமையில் உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியாக இவர்களது காதல் வாழ்க்கை சென்றுக்கொண்டிருந்த நிலையில்,
அந்த காதலிக்கு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அந்த பெண் பரிசோதனை மேற்கொண்ட போது, அவருக்கு கொடிய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த பெண், “எனக்கு கொடிய நோய் இருப்பதால், உடனடியாக நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று, அந்த அந்த பெண், தனது காதலை மிரட்டத் தொடங்கி உள்ளார். இதனால், சில நாட்கள் சற்று சமாளித்து வந்த அந்த இளைஞனால், ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் தினறிப்போனான். இதனால், காதலர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இப்படியான நிலையில், காதலியை தனியாக வரவழைத்த அந்த இளைஞன், “நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக” கூறி, '4 கெட்டமைன் ஊசியை' அந்த பெண்ணுக்கு அவன் செலுத்தி உள்ளான். இந்த விஷ ஊசி செலுத்தப்பட்டதின் காரணமாக, அந்த பெண் அங்கேயே துடித்துடித்து இறந்து போனார். 

இதனையடுத்து, காதலியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு அவர் கொண்டு வந்த ஹான் பேக்கை, சற்று தொலைவில் தூக்கி எரிந்துவிட்டு சென்று விட்டார்.

அதன் தொடர்ச்சியாக, நவி மும்பையின் புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், விரைந்துச் சென்ற போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். ஆனாலும், பெண்ணின் உடலில் எந்தவித காயங்களோ இருக்கவில்லை. 

அதே போல், அந்த பெண்ணின் சடலத்தின் அருகே எந்தவித அடையாளச் சான்றுகளோ, வேற எந்த பொருட்களோ கிடைக்காவில்லை என்பதால், “அந்த பெண் யார்?” என்பதில் அடையாளம் காண முடியாமல் போலீசார் தினறிப்போனார்கள்.

அந்த நேரத்தில், நேற்று முன் தினம் அந்த பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், “கீழே கண்டெடுத்த பொருட்கள் அடங்கிய பையை” அங்குள்ள  காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

அதில், ஆதார் கார்டு, பர்ஸ் உள்ளிட்டவை இருந்தன. இதனை வைத்து போலீசார், விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை ரமேஷ் தோம்ப்ரே என்ற
இளைஞர், அந்த காவல் நிலையத்திற்கு வந்து, “இந்த பை தன்னுடைய சகோதரிக்கு சொந்தமானது என்றும், மருத்துவமனையில் இருந்த சடலத்தை தன்னுடைய சகோதரி தான்” என்றும், உறுதி படுத்தினார்.

மேலும், அந்த இளைஞர் ரமேஷ் தோம்ப்ரே, “பன்வேலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வரும் சந்திரகாந்த் கைகார் என்ற இளைஞரை, என்னுடைய சகோதரிக்கு காதலித்து வந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அவர்களுக்குள் சண்டை நிகழ்ந்ததும் எனக்கு தெரியும் என்றும், அதன் பிறகு தான் அவர் காணமாமல் போனார்” என்றும், அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, சந்திரகாந்த்தை பிடித்து போலீசார் விசாரித்த நிலையில், “காதலியை கொலை செய்ததை” அவன் ஒப்புக்கொண்டான். இது குறித்து, அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.