உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட்டான கல்யாணராமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்  ஜி.என்.ரங்கராஜன். தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த மீண்டும் கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக அறியப்பட்டார். கரையெல்லாம் செண்பகப்பூ , கடல்மீன்கள் என தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வந்த இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் கடைசியாக நடிகர் கமல்ஹாசன் நடித்த மகராசன் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான கிளாஸ்மாட்ஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்குனர் திரு ஜி.என்.ரங்கராஜனின் மகன் ஆவார். நினைத்தாலே இனிக்கும் படத்தை தொடர்ந்து இயக்கிய ஹரிதாஸ் திரைப்படம்  அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் பயணத்தில் முக்கியமான சூப்பர் ஹிட் திரைப்படங்களானா கல்யாணராமன் மற்றும் மீண்டும் கோகிலா போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜி.என்.ரங்கராஜன் அவர்கள் இன்று காலமானார். 90 வயதான ஜிஜி.என்.ரங்கராஜன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். 

தமிழ் சினிமாவில் புகழ்மிக்க மூத்த இயக்குனர்களில் ஒருவரான ஜி.என்.ரங்கராஜனின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . ஜி.என்.ரங்கராஜன் அவர்களின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.