தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவரான அசோக் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கிரைம் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த  தெகிடி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்திய சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய சில நேரங்களில் (Sometimes) என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகர் அசோக்செல்வன். கடைசியாக நடிகர் அசோக்செல்வன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இந்நிலையில் சமீபத்தில் முன்னணி இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பயோபிக் திரைப்படத்தில் அசோக் செல்வன் நடித்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை புகைப்படம் கலாட்டாவின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி  தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. 

அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் அதனை வரவேற்கும் விதமாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில் நடிகர் அசோக்செல்வன் அந்த புகைப்படத்தை மேற்கோள்காட்டி ரவிச்சந்திரன் அஸ்வினை குறிப்பிட்டு “இதற்கு நான் பொறுப்பில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என  பதிப்பித்துள்ளார். 

இப்போது அந்த பதிவிற்கு ரவிச்சந்திரன் அஷ்வின் பதிலளித்துள்ளார்.அதில்  “இணைந்து பணியாற்றுவதற்கு முன்பாக கதையில் இருக்கும் சிஎஸ்கேவின் பகுதியை முதலில் முடித்து விடுவோம்.எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன் அதற்கடுத்த கட்டத்தைப் பற்றி முடிவு செய்வோம்” என தெரிவித்து இருக்கிறார். 

கலாட்டாவின் கற்பனையான ஒரு புகைப்படம் அசோக்செல்வன் & ரவிசந்திரன் அஸ்வின்  இருவரையும் இணைத்து தற்போது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பயோபிக் திரைப்படத்தில் அசோக் செல்வன் நடிப்பதாக இருந்தால் என்ற இந்த கற்பனை தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது விரைவில் இத்திரைப்படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.