உடல் எடையை குறைக்க முனைபவர்களுக்கு  KETO, PALEO, INTERMITTENT FASTING போன்ற டயட்  முறைகளே பெரும்பாலும் பரிட்சயம். இந்த டயட் முறைகளில் நிறைகள் குறைகள் சேர்ந்தே உள்ளன. அதனால் தற்போது, VEGAN  டயட் முறை பிரபலமடைந்து வருகிறது.


மற்ற டயட் முறைகளை விட வீகன் டயட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன. நமது உடலில் சர்க்கரை நோய் மற்றும் கொழுப்புச் சத்து அதிகரித்ததும் மருத்துவர்கள் அறிவுறுத்துவது, சைவ உணவுகளைவை மட்டுமே. உடலில் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுத்தாமல் தேவையற்ற கலோரிகளை மட்டும் குறைக்கிறது.


பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் , மீன், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் கூடுதல் வெர்ஜின் ஆலிவ் ஆயில் ஆகியவை மட்டும் உடலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளும் போது உடல் எடை 6 கிலோ வரை குறைகிறது என்றும் LDL கொழுப்பின் அளவு 18.7 மி.கி / டி.எல் மற்றும் 15.3 மி.கி / டி.எல் குறைந்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உணவுப் பழக்கம் மாற்றம் மட்டுமே உடல் எடை குறைப்புக்கு உதவாது, நல்ல உடற்பயிற்சியும் செய்யும் போது தான், நல்ல பயனை தரும். மேலும் ஒரு டயட் முறையை தொடங்கும் போது மருத்துவர்களை அணுகி, அவரவர் உடலுக்கு எந்த டயட் முறை செட்டாகும் என்று கேட்டு தெரிந்துகொண்ட பின்னரே டயட்களை தொடங்க வேண்டும்.