சுதந்திர இந்தியாவில் பெண் ஒருவர் முதன் முதலாகத் தூக்கு மேடை ஏற போகும் சம்பவம் நாடு முழுவதும் வைரலாகி வருகிறது.

இந்திய சுதந்திரத்திற்கு முன், சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்ட எத்தனையோ இந்திய பெண்கள் நாட்டிற்காகத் தூக்கு மேடை ஏறிய வரலாற்று வீர கதைகளை நாம் வாசித்திருப்போம். ஆனால், இந்தியா சுதந்திரம் பெற்றுப் பிறகு, இப்போது வரை மிக கடுமையான மன்னிக்கவே முடியாத குற்றங்கள் புரிந்த ஆண்கள் மட்டுமே தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.

ஆனால், தற்போது சுந்திர இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் பெண் ஒருவர் முதன் முதலாகத் தூக்கு மேடை ஏற போகிறார். ஆம், இதுவும் வரலாற்றால் ஒரு கரும் புள்ளி தான்.

அதாவது, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ராம்பூர் பகுதியில் உள்ள அம்ரோஹா பகுதியைச் சேர்ந் ஷப்னம் என்ற பெண், கடந்த 2008 ஆம் ஆண்டு தனது குடும்பத்தினர் 7 பேரைக் கொலை செய்த குற்றத்திற்காக அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

பின்னர், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் இவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவரது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் முற்றிலுமாக நிராகரித்து உள்ளார். 

இதன் காரணமாக, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சுந்திர மண்ணில் தூக்கு மேடைக்கு செல்லவிருக்கும் இந்தியாவின் முதல் பெண்ணாக இருக்கிறார் கொலை குற்றவாளியான உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷப்னம்.

அம்ரோகா கொலை வழக்கில், தண்டிக்கப்பட்ட இரு குற்றவாளிகளில் ஒருவரான ஷப்னம், தற்போது வரை சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நாள் நெருங்கி வருவதாகத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 

குறிப்பாக, குற்றவாளியான ஷப்னம், தனது காதல் திருமணத்திற்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர் சலீமுடன் சேர்ந்து தனது ஒட்டுமொத்த குடும்பத்தினர் 7 பேரையும் அவர் மிக கொடூரமான முறையில் கொலை செய்தார். 

இந்த குற்றத்திற்காக அவருக்கு அதிக பட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இந்த தண்டனையைத் தவிர்க்க கோரி கருணை மனு ஒன்றை எழுதி குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பி இருந்தார். அவற்றையும் குடியரசுத் தலைவர் தற்போது நிராகரித்து உள்ளார். 

இந்த வழக்கின் தீர்ப்பில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையே  டெல்லி உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போ, ஷப்னத்தை தூக்கிலிடுவதற்கான நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகச் சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

இதனால், கொலை குற்றவாளி ஷப்னம், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் தூக்கு மேடைக்கு செல்லவிருக்கும் முதல் பெண்ணாக இருக்கிறார். 

இந்தியாவில் பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்து முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் இந்த சூழலில், கொலை குற்றவாளி ஷப்னம் தூக்கு மேடை ஏற இருப்பது, ஒரு சோக நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. கொலை குற்றவாளியான ஷப்னம் தூக்கு மேடை ஏறப்போகும் செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.