சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது சசிகுமார் நடித்து வந்த எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கிரீன்சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக மிருணாளினி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் பாடகர் அந்தோணிதாசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் சசிகுமாரின் மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் ராஜவம்சம். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.