திமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில்,  திமுக மகளிரணி மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துக் கொண்டார். அங்கு திரண்டு இருந்த மக்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் ஈடுப்பட்டு உள்ளனர். இதனால் தான் அதிமுக அரசு அவர்களை காப்பற்ற நினைக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட அப்பாவி பெண்களை மீது எந்த அக்கறைக் கொள்ளவில்லை என்பது தான் உண்மை. சிபிஐயால் கைது செய்யப்பட்ட நபர்கள், அதிமுக அமைச்சர்களுடன் பணியாற்றியது போன்ற புகைப்படங்கள் கூட வெளியாகி உள்ளது. 


திமுகவின் தொடர் போராட்டத்தினால் தான் இந்த பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன்பின்பு தான் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்டுகள் கழித்து தற்பொழுது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அதிமுக அமைச்சர்கள், திமுக மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது கூறும் எந்த ஊழல் வழக்குகளும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. எல்லா வழக்குகளும் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டவை.  
அடுத்த மூன்று மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும், கிராம மக்கள் சபையில் மக்களிடம் பெற்ற மனுக்களுக்கு அனைத்துக்கும் நிச்சயம் தீர்வு காணப்படும்.

அதிமுக 10 வருடமாக மக்களுக்கு செய்ய தவறியதை எல்லாம், திமுக நிச்சயம் செய்யும். முதலில் 10 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக மக்களுக்கு என்ன செய்ததது என்று சொல்ல வேண்டும். அதன் பின்னர் திமுக ஆட்சியில் செய்தது பற்றி நாங்கள் கூறுகிறோம். திமுக மக்களுக்கு செய்தது பற்றி கடந்த தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. முதல்வருக்கு வேண்டும் என்றால் அவருக்கு ஒரு காப்பி அனுப்பவும் தயாராக உள்ளோம் ” என்று தெவித்தார்.