அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. ராக்கி படத்தின் ட்ரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பால், அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு நிலவியது. சாணிக் காயிதம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

சமீபத்தில் ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கைப்பற்றியது. விக்னேஷ் சிவன் - அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள் ஆகும். திரையரங்குகள் சகஜ நிலைக்குத் திரும்பியதால் விரைவில் ராக்கி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ராக்கி படத்தின் புதிய டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆதி முரண் புதிர் எனும் இந்த டீஸர் தொகுப்பை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார். ரத்தம் தெறிக்க தெறிக்க உள்ள இந்த டீஸரில் பாரதிராஜாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. 

ராக்கி படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் சாணிக் காயிதம். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளதாக இந்தப் படத்தினை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாணிக் காயிதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் படத்தொகுப்பு பணிகள் மேற்கொள்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. போஸ்டரில் இருவரின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளது. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்குமா என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். 

படக்குழுவினருடன் திரைக்கதையைப் படிக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றது. அருண் மாதேஸ்வரனின் முழுத் திரைக்கதையையும் படித்துவிட்டு இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில், அருண் மாதேஸ்வரனின் திரைக்கதையை இப்போதுதான் அவருடன் படித்து முடித்தேன். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அசாதாரணமாக இருக்கிறது என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.