“விராட் கோலியை நாய்” என்று அழைத்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கடந்த 13 ஆம் தேதி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

அந்த வீடியோவில், “ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களை” அவர் தெரிவித்து இருந்தார்.

அத்துடன், அந்த வீடியோவில் பேசிய விராட் கோலி, “சுற்றுச் சூழலைப் பாதுகாப்ப பட்டாசுகளை வெடிக்க  வேண்டாம் என்றும், உங்கள் அன்புக்குரியவர்களுடன், மிகவும் எளிமையாகவும், தீபமேற்றியும் இனிப்புகள் வழங்கியும் தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்” என்றும், விராட் கோலி பேசியிருந்தார்.

இதனையடுத்து, “பட்டாசு வெடிக்க வேண்டாம்” என்று விராட் கோலி பேசியதற்கு, பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்க் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

முக்கியமாக, ஐபிஎல் தொடரில் பட்டாசு வெடிக்கப்படும் என்றும், ஐபிஎல் இறுதிப் போட்டியின் முடிவில் பெரிய அளவில் பட்டாசு வெடிக்கப்படும் என்றும், இதனைக் குறிப்பிட்டு ரசிகர்கள் பலரும், “ஐபிஎல் தொடரில் நீங்கள் விளையாடும் போது மட்டும் பட்டாசு வெடிக்கலாம், ஆனால், நாங்கள் பண்டிகையாகக் கொண்டாடும் போது, பட்டாசு வெடிக்க கூடாதா?” என்றும், ரசிர்கள் பெருமக்கள் பலரும் வெடித்துக் கிளம்பி தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர்.

அத்துடன், இந்த மாத தொடக்கத்தில் துபாயில் தனது பிறந்த நாளை, ஆர்சிபி அணியினருடன், விராட் கோலி பட்டாசு வெடித்துக் கொண்டாடிய செய்தியையும், பலரும் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான உதித் ராஜ், விராட் கோலியை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அதன் படி, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட உதித் ராஜ், “அனுஷ்கா தனது நாய் விராட் கோலியை கவனித்துக் கொள்ள வேண்டியதில்லை. நாயை விட யாரும் உண்மை உள்ளவர்கள் அல்ல. நீங்கள் பூர்வீகமாக இருக்கிறீர்களா இல்லையா? என்பதை உறுதி செய்ய உங்களுக்கு டி.என்.ஏ. எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டு இருந்தார்.

இதனால், விராட் கோலியை உதித் ராஜ் நாய் என்று, ஏன் குறிப்பிட்டு விமர்சனம் செய்தார் என்பது பற்றி முழுமையாக எதுவும் தெரியாத நிலையில், அவரது இந்த கருத்து மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் உதித் ராஜின் இந்த கருத்துக்கு, பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து உள்ளனர்.

அதே போல், கணவன் விராட் கோலி இல்லாமல் தனியாகத் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அனுபவங்களை, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் தொடருக்காக, தனது சக இந்திய அணி வீரர்களுடன், ஆஸ்திரேலியாவில் முகமிட்டு உள்ளார்.

இதனால், விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா, மும்பையில் உள்ள தனது வீட்டில் உள்ள நிலையில், கணவன் விராட் கோலி இல்லாமல் இந்த தீபாவளியை அவர் தனியாக கொண்டாடிய நிலையில், அந்த அனுபவங்களை அவர் இணையத்தில் பகிர்ந்தார். இதனால், அவைகள் வைரலானது. முக்கியமாக, அனுஷ்கா ஷர்மா தற்போது கரு உற்றுள்ள நிலையில், அவருக்கு அடுத்த ஆண்டு குழந்தை பிறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.