வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரை சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் காரின் முன்பக்கத்தில் இழுத்துச் சென்ற வாகன ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது. 

குஜராத் மாநிலத்தில் தான், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாருக்கு இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் சூரதின் நவ்சரி ரயில் நிலையம் பகுதியில் நேற்று முன் தினம் போக்குவரத்து காவலர்கள் இருவர், அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த காரை நிறுத்திய காவலர்கள் ஓட்டுநரிடம் ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், அந்த ஓட்டுநர், தனது வானத்தின் ஆவணங்களைக் காட்ட மறுத்துவிட்டு, தனது காரை எடுத்துக்கொண்டு, அந்த ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்ப முயன்று உள்ளார். 

அப்போது, அங்கிருந்த போக்குவரத்து காவலர் ஒருவர், அந்த காரின் முன் பகுதிக்கு ஓடிச் சென்று, காரை நிறுத்த முற்பட்டு உள்ளார். ஆனாலும், அந்த நபர் தன் காரை தொடந்து இயக்கிய உள்ளார். இதனால், காரின் முன் பக்கம் வந்த காவலர், உயிர் பயத்தில் அந்த காரின் முன் பக்கத்தில் அப்படியே சாய்ந்த படியே படுத்துக்கொண்டு, அந்த காரின் ஒரு பகுதியைப் பிடித்துக்கொண்டார். ஆனால், இதற்கெல்லாம் கலங்காத அந்த காரின் ஓட்டுநர், அந்த போக்குவரத்து காவலரை காரின் முன் பகுதியில் வைத்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் வரை, அவர் சென்றிருக்கிறார். 

இதனைப் பார்த்த அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மற்றொரு போலீசார், தன்னுடைய இருசக்கர வாகனத்தில், அந்த காரை துரத்திக்கொண்டு வந்து உள்ளார்.

அப்போது, ஒரு வழியாக அந்த காரை மடக்கிப்பிடித்த அந்த போக்குவரத்து காவல் துறையினர், அந்த கார் ஓட்டுநர் மீதும் அதில் பயணம் செய்த 7 பயணிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த அந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இதனிடையே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை, ஆவணங்களைக் காட்டுமாறு கேட்டதற்காக சுமார் 25 கிலோ மீட்டர் காரின் முன் பகுதியில் வைத்து ஓட்டுநர் இழுத்துச் சென்ற சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதே போல், தமிழகத்தின் திண்டுக்கல்லின் இடத்தகராறால் தொழிலதிபர் இரண்டு விவசாயிகளைக் கைத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயிகள் இருவரும், தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விவசாயிகளைத் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்ட அந்த காட்சிகள் அனைத்தும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் வெளியான நிலையில், விவசாயிகளைத் துப்பாக்கியால் சுட்ட தொழிலதிபரை போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், “விவசாயி இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில் தனக்கும் சொந்தமான நிலமும் இருப்பதாகத் தொழிலதிபர் நடராஜன் பிரச்சனை செய்து வந்த நிலையில், இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து உள்ளதாக” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.