14 நாள்களே ஆன ஆண் குழந்தையை 3 வது மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூர தாயை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

தெலங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குத்புலாபூர் பகுதியைச் சேர்ந்த நோதி வேணுகோபால் என்பவருக்கும், அங்குள்ள ஃபதேநகர் தேதாஜி பகுதியைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 2016 ஆம் ஆ்டு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக, கணவன் - மனைவி இருவரும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில், இந்தத் தம்பதியருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைப் பிறந்த பிறகு, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. 

இப்படி அடிக்கடி கணவன் - மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு காணமாக, நோதி வேணுகோபால் மனைவி லாவண்யா, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தனது அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார். அங்கு சில நாட்கள் இருந்து விட்டு, மீண்டும் கணவன் சமாதானம் செய்யவும், மீண்டும் கணவன் வீட்டிற்கு வந்து விட்டார். பிறகு, மீண்டும் கணவனுடன் சண்டை வரவே, மீண்டும் அம்மா வீட்டிற்கு செல்வதும், அதன் பிறகு மீண்டும் கணவன் வீட்டிற்கு வருவதுமாக இருந்துள்ளார். இப்படியான வாழக்கைக்கு அவர், சமீபத்தில் தள்ளப்பட்டார். 

இப்படியே, இவரது வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நிலையில், தற்போது லாவண்யா மீண்டும் கரு உற்றார். அவருக்கு, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்து தற்போது 14 நாள்கள் மட்டுமே ஆகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவன் - மனைவி இடையே மீண்டும் சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கணவன் - மனைவி இருவரும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கடும் கோபம் அடைந்த அவர் மனைவி கோபத்தில் தான் என்ன செய்கிறேன் என்பது கூட தெரியாமல், தன்னை மறந்து, குழந்தை பிறந்து 14 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், அந்த குழந்தையை அவரது தாயார் லாவண்யா, தனது வீட்டின் 3 வது மாடியில் 
இருந்து தூக்கி கீழே வீசி உள்ளார். இதில், அலறித் துடித்தபடி கீழே விழுந்த குழந்தை, பயங்கரமாக அழுத துடித்த நிலையில், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. இதனைப் பார்த்த அந்த குழந்தையின் தந்தை, அங்கேயே கதறித் துடித்தார்.

இதனால், பதறிப்போன தந்தை வேணுகோபால், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்திற்கு போன் மூலம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், சாந்தி நகர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து வேணுகோபால் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில், அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.