கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் சார்லி. துல்கர் சல்மான் நாயகனாக நடித்த இந்த படத்தில் பார்வதி ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. தமிழில் மாறா என்ற பெயரில் ரீமேக்காகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். 

மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இதில் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இந்த ஜோடி இணைகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கவிஞர் தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்டாண்டப் காமெடியன் அலெக்ஸ் இதில் திரைக்கதை எழுதியுள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்த இந்த படம் டிசம்பர் 17-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. 

கொரோனா நோய் பரவல் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே மாறா திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் துவங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. படப்பிடிப்பு தளத்தில் மாதவன் கையில் காஃபி மக்குடன் காணப்பட்டார். ஷிவதா மற்றும் ஷ்ரத்தா கொண்ட மற்றோரு புகைப்படமும் ரசிகர்களை ஈர்த்தது. படத்தின் ஆடியோ உரிமத்தை திங்க் மியூசிக் இந்திய கைப்பற்றியுள்ளது. 

மாறா படத்திற்கான டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. நடிகை ஷிவதா தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசி நிறைவு செய்தார். சமீபத்தில் நடிகர் மாதவன், அவர் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசி நிறைவு செய்துள்ளார். படத்தின் முதல் சிங்கிள் யார் அழைப்பது பாடலின் லிரிக் வீடியோ கடந்த மாத இறுதியில் வெளியானது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் சிங்கிள் தற்போது வெளியானது. ஒரு அறை உனது என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை யாசின் நிசார் மற்றும் சனா பாடியுள்ளனர். தாமரை பாடல் வரிகள் எழுதியுள்ளார். 

நடிகர் மாதவன் கடைசியாக திரையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியுன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஒரு கேமியோ ரோலில் காணப்பட்டார். அதன்பிறகு மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் பணிபுரிந்து வந்தார். கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாததால் மாதவன் நடித்த நிசப்தம்/ சைலன்ஸ் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.