சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டி இன்று தூவங்கியது.மைதானத்தில் இந்தியாவுடனான 100வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்  சதம் அடித்து அசத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து அணியுடன்  சொந்த மண்ணில் விளையாடுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று துவங்கியது. கொரோனா கட்டுப்பாடு காரணமாகப் போட்டியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசு கிரிக்கெட் போட்டிகளை பார்க்க 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளதைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படும் என  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி டாஸ்வென்று முதலில் பேட் செய்தது. ரோரிபர்ன்ஸ், டாமினிக் இணை முதலில் களம் இறங்கி நிதானமாக ஆட்டத்தை துவக்கியது. இவர்கள் 50 ரன் வரை விக்கெட் கொடுக்காமல் நிதானமாக ஆடினர். 

இங்கிலாந்து அணி 63 ரன் இருந்தபோது  அஸ்வின் வீசிய பந்தில் ரோரி பர்ன்ஸ் 33 ரன் இருக்கும் போது ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அடுத்து களம் இறங்கிய டேன் லாரன்சை ரன் எதுவும் எடுக்கவிடாமல்  டக்கவுட் செய்து சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் விக்கட்டை பதிவு செய்தார் பும்ரா.
பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாமினிக்  சேர்ந்து இந்திய வீரர்களின் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். 
முதல் நாள் ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் தனது 100-வது சதமடித்து அசத்தினார். 100-வது போட்டியில் சதம் அடிக்கும் 9 வது வீரர் ஜோரூட் என வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ,டாமினிக் ஜோடியை பிரிக்க  இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர்.

முதல்நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3 வது பந்தில் டோமினிக் அவுட்டாகி வெளியேறினார். இன்றைய நாள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழந்து 263 ரன் சேர்த்துள்ளது.  128 ரன்னுடன் ஜோ ரூட்  ஆட்டமிழக்காமல் களத்தில்  உள்ளார்.