மலைக்கோட்டை வாலிபன்: மோகன்லால் & லிஜோ ஜோஸ் பெல்லிசேரி காம்போவின் பிரம்மாண்ட பீரியட் ஆக்சன் பட அட்டகாசமான டீசர் இதோ!

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் பட டீசர் வெளியீடு,mohanlal in malaikottai vaaliban movie teaser out now | Galatta

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக விளங்கும் நடிகர் மோகன்லால் அவர்கள் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் நடித்திருக்கும் பிரம்மாண்ட பீரியட் ஆக்சன் திரைப்படமான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. மோகன்லால் அவர்களின் கம்பீரக் குரலில் "கண் கண்டது நிஜம் காணாதது பொய் நீ கண்டது எல்லாம் பொய் இனி காண போவது நிஜம்" என்ற வசனத்தோடு மோகன்லால் அவர்களின் மிரட்டலான லுக்கில் தற்போது வெளிவந்திருக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசர் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் மோகன்லால் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி காம்போவின் மலைக்கோட்டை வாலிபன் பட டீசர் இதோ…

 

மலையாளத் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஈ மா யு, ஜல்லிக்கட்டு மற்றும் சுருளி ஆகிய திரைப்படங்கள் மொழிகளை கடந்து அனைத்து சினிமா ரசிகர்களாலும் மிகவும் ரசிக்கப்பட்டன. இந்த வரிசையில் கடைசியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி அவர்கள் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக முதல் முறை மோகன்லால் அவர்களுடன் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கைகோர்த்த திரைப்படம் தான் மலைக்கோட்டை வாலிபன். 

PS.ரபீக் கதையில், இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் PS.ரபீக் இணைந்து திரைக்கதை வசனம் எழுத, இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியிருக்கும் இந்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் சோனாலி குல்கர்னி, ஹரிஷ் பெரடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட் மற்றும் மனோஜ் ஆச்சாரி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மது நீலகண்டன் ஒளிப்பதிவில் பிரசாந்த் பிள்ளை இசை அமைக்கும் இந்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்திற்கு தீபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். பீரியட் ஆக்சன் படமாக வெளிவர இருக்கும் இந்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்திற்கு விக்ரம் மோர் மற்றும் சுப்ரீம் சுந்தர் (துணிவு & கங்குவா படங்களின் ஸ்டண்ட் இயக்குனர்) இருவரும் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். வருகிற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி குடியரசு தின வெளியீடாக மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் மோகன்லால் அவர்கள் இயக்கி நடிக்கும் அட்டகாசமான ஃபேண்டஸி திரைப்படமான பர்ரோஸ் - கார்டியன் ஆஃப் தி காமா'ஸ் ட்ரெஷர் என்ற திரைப்படம் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அது போக நேரு, ராம் பாகம் 1, கண்ணப்பா உள்ளிட்ட திரைப்படங்களும், லூசிஃபர் படத்தின் 2வது பாகமான L2:எம்புரான் படமும் அடுத்தடுத்து மோகன்லால் நடிப்பில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.