“கள்ளக் காதலி யாருக்கு சொந்தம்?” கள்ளக் காதலர்களுக்குள் போட்டா போட்டி! கத்தி குத்தில் ஒரு காதலன் கொலை...

“கள்ளக் காதலி யாருக்கு சொந்தம்?” கள்ளக் காதலர்களுக்குள் போட்டா போட்டி! கத்தி குத்தில் ஒரு காதலன் கொலை... - Daily news

“கள்ளக் காதலி யாருக்கு சொந்தம்?” என்று, கள்ளக் காதலர்களுக்குள் போட்டா போட்டி! கத்தி குத்தில் ஒரு காதலன் கொலை...

தமிழ்நாட்டின் மைய பகுதியாக திகழும், திருச்சியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, திருச்சி திருவெறும்பூர் அடுத்து உள்ள கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், அந்த பகுதியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன நிலையில், இருவரும் ஒன்றாகவே வசித்து வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், இவரின் மனைவி, விவகாரத்து பெற்று தனியாக சென்று விட்டார். 

இந்த விவகாரத்து சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது நண்பர் திருவெறும்பூர் காந்தி நகரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரும், அதே பகுதியில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆனால், இந்த முத்துப்பாண்டி திருமணம் ஆகாமல் இருந்திருக்கிறார்.

இந்த சூழலில் தான், சதீஷின் வீட்டு அருகே வசித்து வந்த ஒரு பெண்ணுடன், முத்துப் பாண்டிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி இருக்கிறது.

இதன் காரணமாக, முத்துப்பாண்டி அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்றும், கூறப்படுகிறது. 

ஆனால், அந்த பெண்ணுடன் ஏற்கனவே சதீஷுக்கும் கள்ளக் காதல் உறவு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியாக, தனது நண்பன் முத்துப்பாண்டி அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றால், இந்த விசயம் சதீசுக்கும் தெரிய வந்து, ஒரு கட்டத்தில் தனது நண்பன் மீதே கடும் ஆத்திரம் அடைந்து உள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த சதீஷ், தனது நண்பன் முத்துப்பாண்டியை அழைத்து, “நீ இனிமேல் அந்த பெண்ணின் வீட்டிற்குள் போகக்கூடாது என்றும், அந்த வீட்டிற்கு நான் மட்டும் தான் போய் வருவேன்” என்று, கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, சதீஷிடம் “நீ இனிமேல் வராதே, நான் தான் வருவேன்” என்று, பதிலுக்கு சொல்ல, அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் நள்ளிரவில் வழக்கம் போல அந்த பெண்ணின் வீட்டிற்கு முத்துப்பாண்டி சென்றிருக்கிறார். இதனை, தனது வீட்டு வாசலில் நின்று சதீஷ் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், உடனடியாக ஓடிச் சென்று முத்துப்பாண்டியை மிரட்டி இருக்கிறார்.

இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் இது சண்டையாகவும் மாறியிருக்கிறது. அப்போது, முத்துப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத், சதீஷை சரமாரியாக குத்தி உள்ளார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சதீஷ் சரிந்து விழுந்த நிலையில், சம்பவ இடத்திலேயே சதீஷ் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

அதன் பிறகு, கள்ளக் காதலிக்காக, தனது நண்பனை கொலை செய்த கத்தியுடன், அங்குள்ள திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு சென்று முத்துப்பாண்டி சரண் அடைந்திருக்கிறார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், முத்துப்பாண்டியை கைது செய்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று சதீஷின் உடலை மீட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment