"நிஜத்தில் எப்படிப்பட்ட அம்மா?"- ஹீரோக்களின் ஃபேவரட் அம்மா சரண்யா பொன்வண்ணனின் பதில் இதுதான்! வீடியோ உள்ளே

நிஜத்தில் எப்படிப்பட்ட அம்மா என சரண்யா பொன்வண்ணன் பதில்,actresssaranya ponvannan about her real mother charecter | Galatta

இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளிவந்த நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தற்போதைய தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணன் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

அந்த வகையில், பல முன்னணி நட்சத்திர நாயகர்களும் தன்னோடு இணைந்து தனது மகனாக நடிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டிருந்த நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் பேசிய போது, "எனக்கு மகனாக நடிப்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை அவர்களுக்கு ஒரு சந்தோஷம் என்பது நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என நினைக்கிறேன்" என தெரிவித்தார். அப்போது பேசிய நடிகர் சதீஷ், “இதை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இவர் சரண்யா பொன்வண்ணன் எனக்கு அம்மாவாக நடிக்கிறார் என்று சொன்னவுடனே முதல் முதலில் சந்தோஷப்பட்டவர் என்னுடைய அம்மா. அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.. “பரவாயில்லை உனக்கு அம்மாவாக அவர் நடிக்கிறார்” என்று சொன்னார்கள்” என்றார். தொடர்ந்து அவர்களிடம் “சரண்யா பொன்வண்ணன் அவர்கள் ஒரு கனவு அம்மா அல்லவா வேலையில்லா பட்டதாரி இருக்கட்டும் நீர்பறவை இருக்கட்டும் எல்லோரும் யோசிப்பார்கள் இப்படி ஒரு அம்மா கிடைக்க மாட்டாரா என்று ஒரு ஏக்கம் இருக்கும் யாராவது உங்களிடம் கேட்டு இருக்கிறார்களா நீங்கள் நிஜமாகவே இப்படிப்பட்ட ஒரு அம்மா தானா என்று?” என கேட்டபோது, 

“நிஜமாகவே நீங்கள் அம்மாவாக அப்படித்தான் இருப்பீர்களா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அதுதான் எனக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த மற்றொரு பெரிய அதிர்ஷ்டம். என்னவென்றால், எல்லா படங்களிலும் அந்த அம்மா கதாபாத்திரத்தில் வரும் போது சும்மா பின்னணியில் நிற்பதாகவோ வெறும் காபி கொண்டு வந்து கொடுப்பது போலவோ அவ்வளவுதான் இருக்கும். ஆனால் எனக்கு அதில் நல்ல ஒரு கதாபாத்திரமும் அமைந்து வந்தது அந்தந்த இயக்குனர்களுடைய ஒரு பெரிய சாமர்த்தியம் தான். இந்த படத்தில் (காஞ்சூரிங் கண்ணப்பன்) எனக்கு இப்படி ஒரு கதாபாத்திரம்… என்னை நீங்கள் இப்படி அழைத்து பேசுகிறீர்கள் என்றாலே, அதற்கு இயக்குனர் செல்வின் தான் காரணம். அதற்கு அந்த இயக்குனர்கள் தான் காரணமே தவிர அதை நான் என்னுடைய கிரெடிட் என நான் சொல்லவே மாட்டேன். அப்போது அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் தொடர்ந்து வரும் போது நிஜமாகவே நீங்கள் அந்த மாதிரியான ஒரு அம்மா தானா என்று என்னிடம் கேட்பார்கள். கிட்டத்தட்ட நான் அந்த மாதிரியான ஒரு அம்மா தான் நிஜமாகவே. ஒருவேளை அதனால் கூட எனக்கு இந்த கதாபாத்திரங்கள் மிகவும் ஈஸியாக பண்ண முடிகிறதோ என்று எனக்கு தோணும். நான் கொஞ்சம் பிள்ளைகளுக்கு சப்போர்ட் தான். என்ன தவறு செய்தாலும் சப்போர்ட் பண்ணுகிற ஒரு மிகவும் நெருக்கம் இருக்கக்கூடிய ஒரு அம்மா என்பதால், மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் எல்லா அம்மாக்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். அது அப்படியே படத்தில் வந்ததனால் என்னால் அது கொஞ்சம் நன்றாக வந்தது என தோன்றுகிறது” என தெரிவித்திருக்கிறார். இன்னும் பல முக்கிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.