இளம் பெண் காதல்.. கர்ப்பம்.. குழந்தை! “கட்றா தாலிய.. ஜாமீன் தரேன்” டாப் கியரில் எகிறிய நீதிபதி! வெலவெலத்து போன காதலன்..

இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி குழந்தையும் பிறந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்த காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், “நீ தாலி கட்டினால் தான் ஜாமீன் தர முடியும்” என்று, நீதிபதி டாப் கியரில் எகிறிய எகிறி அடித்த சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடந்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் வாலமங்கலம் அடுத்த வடுகப்பட்டியைச் சேர்ந்த 23 வயதான அஜித் என்ற இளைஞன், அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற 20 வயது இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.
அஜித்தின் ஆசை வார்த்தைகளில் காதல் வலையில் இளம் பெண் சத்யாவும் ஒரு கட்டத்தில் சிக்கிய நிலையில், “திருமணம் செய்து கொள்வதாக” ஆசை ஆசையான வார்த்தைகளை கூறிய அஜீத், அந்த இளம் பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அவருடன் நெருங்கி பழகிய நிலையில், அவரை கர்ப்பமாக்கி உள்ளார்.
தொடக்கத்தில் அந்த இளம் பெண்ணுக்கு, தான் கர்ப்பம் அடைந்திருப்பது தெரியாத நிலையில், போக போக தெரிய வந்திருக்கிறது. இதனால், சற்றே அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், காதலன் அஜித்திடம் “என்னை உடனே கல்யாணம் பண்ணிக்கொள்” என்று, அடம் பிடித்திருக்கிறார்.
ஆனால், அந்த காதலன் காதலி கர்ப்பமாக இருக்கும் போது, “அதோ, இதோ என்று, திருமணமா செய்வதாக” தொடர்ச்சியாக அந்த இளம் பெண்ணை ஏமாற்றியே வந்திருக்கிறார்.
ஆனால், அந்த காதல் கர்ப்பினியான இளம் பெண்ணை கடைசி வரை, அந்த காதலன் அஜித் திருமணம் செய்யவே இல்லை.
இதனால், ரொம்பவே ஏமார்ந்து போன அந்த இளம் பெண், பல முறை காதலன் அஜித்திடம் வந்து கெஞ்சியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
ஆனால், கடைசி வரை திருமணமே செய்யாமல் காதலன் காலம் கடத்தி வந்த நிலையில், அந்த இளம் பெண்ணுக்கு முன்னதாக ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது.
முக்கியமாக, அந்த இளம் பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த போது, அந்த குழந்தையை பார்க்க கூட காதலன் அஜித் வரவில்லை.
அத்துடன், கிட்டதட்ட ஒரு வருட காலம் காத்திருந்தும் காதலன் அஜித் தன்னை திருமணம் செய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்த காரணத்தால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண் சத்யா, “காதலன் அஜித் என்னை ஏமாற்றி விட்டதாக” அங்குள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் “ஜாமீன் கோரி” காதலன் அஜித், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர், “உன் காதலியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி குழந்தையை பெற்றெடுக்கவும் நீ காரணமாக இருந்திருக்கிறாய். உன் காதலியான சத்யாவை நீ திருமணம் செய்து கொண்டால் தான், நான் உனக்கு ஜாமீன் தருவேன்” என்று, நீதிபதி விடபிடியாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த காதலன், வேறு வழி தெரியாமல் நீதிபதியின் நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து, நீதிபதியின் உத்தரவின் பேரில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில், அஜித் - சத்யா ஜோடிகளுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தை கண்காணிப்பதற்காக நீதிபதி, 2 வழக்கறிஞர்களையும் நியமித்தார். அதன்படி, இரு வழக்கறிஞர்களின் முன்னிலையில் இந்த காதல் ஜோடிகளுக்கு முறைப்படி திருமணம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாகவே, திருமண கோலத்தில் புதுமண தம்பதிகள் இருவரும், மாவட்ட முதன்மை நீதிபதி முன்பாக ஆஜர் ஆனார்கள்.
அப்போது, புதுமண தம்பதிகள் இருவரையும் வாழ்த்திய நீதிபதி, அஜித்திற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து, அஜித் வெளியே வந்த நிலையில், அவர் மீதான வழக்கை வாபஸ் பெற சத்யாவும் முன்வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.