துணை நடிகை தற்கொலை வழக்கில் "புஷ்பா" பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது! விவரம் உள்ளே

துணை நடிகை தற்கொலை வழக்கில் புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் கைது,pushpa actor jagadeesh prathap arrested for actress suicide | Galatta

புஷ்பா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல தெலுங்கு நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரியை துணை நடிகை தற்கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா. நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் அவரது நண்பன் கதாபாத்திரத்தில் கேசவா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் பண்டாரியை தற்போது காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தெலுங்கு சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் துணை நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது துணை நடிகை தற்கொலை வழக்கில் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது முன்னதாக கடந்த சில காலமாக பிரபல தெலுங்கு துணை நடிகை உடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி இருந்ததாக தெரிகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நிறைய குறும்படங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதிலிருந்து வளர்ந்த நட்பு ஒரு கட்டத்தில் நெருக்கமாக இருவரையும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. இதனை அடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தோடு இருந்த அந்த நடிகை கூடுதலாக தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். 

சினிமாவில் பெரிய கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகள், இல்லாத சமயத்தில் குறும்படங்களில் அந்த நடிகை நடித்து வந்திருக்கிறார் அந்த வகையில் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரியுடன் பழக வாய்ப்பு கிடைத்ததால் இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் இருவரும் சமீபத்தில் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இந்த நிலையில் பிரிந்த பிறகும் அந்தப் நடிகைக்கு தொடர்ந்து ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி தனது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர்கள் நெருங்கி இருந்தபோது எடுக்கப்பட்ட அந்த நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி அவற்றை இணையத்தில் கசிய வைத்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக ஐபிசி பிரிவு 174 இன் கீழ் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த மல்லேஷம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி. மல்லேஷம் படத்தை தொடர்ந்து ஜார்ஜ் ரெட்டி, பலசா 1978 ஆகிய திரைப்படங்களில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி அதன் பின்னர் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் நடித்து மிகப் பிரபலம் அடைந்தார் அடுத்தடுத்து பிக் பாக்கெட், விரட்ட பர்வம், புட்ட பொம்மா & சதி கனி ரெண்டு எகலரு உள்ளிட்ட படங்களில் நடித்த ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி அடுத்ததாக, தற்போது தயாராகி வரும் புஷ்பா 2 படத்திலும் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்து வருகிறார். இதுபோக சிவரக்கு மிகிலேதி மற்றும் பிக் பாக்கெட் 2 தி மர்டர் பிளான் உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி நடித்து வருகிறார்.