மோகம்.. காமம்.. 2 மகள்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!

மோகம்.. காமம்.. 2 மகள்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை! - Daily news

தனது இரு மகள்கள் மீது இருந்த மோகம்.. காமத்தால், 2 மகள்களை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, மும்பையைச் சேர்ந்த 38 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவர், தனது மனைவி உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் என்று மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.

அந்த இரு மகள்களும், அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இப்படியான சூழலில் தான், சரவணனின் மனைவி திடீரென்று உயிரிழந்த நிலையில், சரவணன் தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

அப்போது மூத்த மகளுக்கு 16 வயதும், இளைய மகளுக்கு 14 வயதும் நடப்பதால், அவர்கள் இருவரும் தங்களது வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டே, தினமும் பள்ளிக்கு சென்று படித்து வந்தனர்.

இப்படியாக, தனது மகள் மற்றும் மகனும் வசித்து வந்த தந்தை சரவணன், ஒரு கட்டத்தில் தனது மகள்கள் மீது சபலப்பட்டு இருக்கிறார்.

அந்த சபல புத்தி, ஒரு கட்டத்தில் காமமாக மாறிய நிலையில், அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு 16 வயதான மூத்த மகள் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், வீட்டிற்கு வந்த அந்த தந்தை சரவணன், தான் பெற்ற மகள் என்றும் பார்க்காமல், அந்த மகளை கடுமையாக மிரட்டி அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூத்த மகள், தந்தையின் இந்த செயல் குறித்து வெளியே கூறினால், குடும்ப மானம் போய்விடும் என்பதால், தந்தையின் பாலியல் சித்ரவதைகளை தாங்கிக்கொண்டு, அந்த பெண் வேறு வழியில்லாமல் அப்படியே இருந்திருக்கிறார்.

ஆனால், அதன் தொடர்ச்சியாக, அடுத்த சில நாட்களில் வீட்டில் தனியாக இருந்த 14 வயதான இளைய மகள் மீதும் சபலப்பட்ட சரவணன், அவரையும் மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைய மகளும், தந்தையின் இந்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்திருக்கிறார்.

இப்படியாக, கடந்த 3 ஆண்டுகளாக சரவணன், தான் பெற்ற மகள்கள் என்றும் பார்க்காமல் இரு மகள்களையும் மிரட்டியே மாறி மாறி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

தந்தையின் பாலியல் வெறியால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த சிறுமிகள் இருவரும், ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து, தந்தையின் பாலியல் வெறியாட்டம் குறித்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறி புலம்பி தவித்து உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த காம வெறிப்பிடித்த தந்தையை அதிரடியாக கைது செய்தனர். 

அத்துடன், அவரை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில், இது தொடர்பான வழக்கு நடந்து வந்தது. 

தற்போது, இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில், தந்தை சரவணன் மீதான குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். இச்சம்பவம், மும்பையில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment