கள்ளக் காதலன் இருக்கும் போது இன்னொரு கள்ளக் காதலனை வரச் சொன்ன கள்ளக் காதலி கொலை!

கள்ளக் காதலன் இருக்கும் போது இன்னொரு கள்ளக் காதலனை வரச் சொன்ன கள்ளக் காதலி கொலை! - Daily news

கள்ளக் காதலன் இருக்கும் போது, இன்னொரு கள்ளக் காதலனை வரச் சொன்ன கள்ளக் காதலியை, முதல் காதலன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் கடலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள கீழமணக்குடி கிராத்தைச் சேர்ந்த 45 வயதான சீதாலட்சுமி என்ற பெண்ணுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த குமார் என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து வீடு என்பதால், இவர்கள் இருவரும் அடிக்கடி நெருக்கமாக பழகி, உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

அது நேரத்தில், குமார் பக்கத்து வீடு என்ற போதிலும், அவர் வேலை விசயமாக அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வாரத்தின் இறுதியில் தான் ஊருக்கு திரும்பி வருவார் என்றும் கூறப்படுகிறது. 

அதன்படி, புதுச்சேரியில் கொத்தனார் வேலை பார்த்து வந்த குமார், ஞாயிற்றுக் கிழமை மட்டும் சொந்த ஊருக்கு வருவதுண்டு. அப்படி வரும் போதெல்லாம், குமார் பக்கத்து வீட்டில் உள்ள கள்ளக் காதலி சீதா லட்சுமியிடம் உல்லாசமாக இருந்து விட்டு போவது வாடிக்கையாக நடந்துக் கொண்டிருந்து உள்ளது.

இப்படியான சூழலில் தான், கடந்த 11 ஆம் தேதி அன்று குமார் எப்போதும் போல் அவரது வீட்டுக்கு வந்து உள்ளார். வீட்டிற்கு வந்த உடன், பக்கத்து வீட்டில் உள்ள சீதா லட்சுமியை உல்லாசத்துக்கு வருமாறு குமார் அழைத்து இருக்கிறார். 

அப்போது, குமாருடன் வர மறுத்த சீதா லட்சுமி, “நான் ஏற்கனவே ஒரு ஆண் நண்பரை என் வீட்டுக்கு வரசொல்லி இருக்கிறேன். அதனால், இன்றைக்கு வேண்டாம். உடனே இங்கிருந்து போ” என்று, கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்ட கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த குமார், அந்த பெண்ணுடன் கடும் வாக்குவாத செய்திருக்கிறான். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், சீதாலட்சுமி மிகவும் ஆபாசமாக குமாரை திட்டி இருக்கிறார். 

இதனால், இன்னும் கோபம் அடைந்த குமார், அங்கிருந்த அம்மிக் கல்லை தூக்கி அந்த பெண்ணின் தலையில் போட்டு, அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், உயிரிழந்திருக்கிறார்.

இது தொடர்பாக, 2 நாட்களாக சீதா லட்சுமியின் வீடு திருக்கப்படாமல் இருந்ததால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து விரைந்து வந்த பார்த்த போலீசார், சீதா லட்சுமியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இந்த கொலை சம்பவம் குறித்து, பக்கத்து வீட்டில் விசாரிக்கலாம் என்று போலீசார் நினைத்த நிலையில், அங்கு குமாரின் வீடு பூட்டியே கிடந்து உள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், குமார் மறைந்திருக்கும் இடம் தெரிந்து, அவரை அதிரடியாக பிடித்து விசாரித்த போது, எல்லா உண்மையும் போலீசாருக்கு தெரிய வந்தது.

குறிப்பாக, “கோபத்தில்தான் அப்படி செய்தேன் என்றும், கொல்லும் நோக்கம் இல்லை” என்றும், குமார் கூறியிருக்கிறான். எனினும், குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment