“வாட்ஸ்ஆப் DP -யில் மனைவி படத்தை வைத்திருக்கிறீர்களா?” உஷார்..

“வாட்ஸ்ஆப் DP -யில் மனைவி படத்தை வைத்திருக்கிறீர்களா?” உஷார்.. - Daily news

வாட்ஸ்ஆப் DP -யில் மனைவி படத்தை வைத்திருப்பவர்களை குறிவைத்து, சில மோசடி கும்பல் பணம் பறித்து வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படியான அதிர்ச்சி சம்பவங்கள் நடந்திருக்கிறது.

இந்தியா உட்பட உலகமே டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. மாறி வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில், எந்த அளவுக்கு வளர்ச்சிகள் இருக்கிறதோ, அதற்கு நேர் எதிரான அது சார்ந்த குற்றங்கள் நடப்பது நாளுக்கு நாள் தற்போது அதிகரித்து வருகிறது.

அதாவது, ஆன்லைன் மோசடி, செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்து, பணம் பறிப்பது என்று தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில், அந்த டிஜிட்டல் குற்றங்கள் தற்போது அடுத்தக்கட்டதை எட்டி உள்ளது என்றுகூட கூறலாம்.

அதாவது, தற்போது பெரும்பாலனவர்கள் வாட்ஸ்ஆப் DP -யில் தனது குடும்பத்தின் போட்டோக்களை வைப்பதை அதிகம் விரும்புகிறார்கள். அதுவும், தனது மனைவி மற்றும் பெண் குழந்தைகளின் புகைப்படத்தை வைத்திருப்பதையும் பெரும்பாலன ஆண்கள் விரும்புகிறார்கள்.

அப்படிதான், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) தனது வாட்ஸ்ஆப் DP -யில் தனது மனைவியின் புகைப்படத்தை வைத்திருந்து உள்ளார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் ஒரு புதிய நம்பரில் இருந்து அந்த நபரின் வாட்ஸ்ஆப் நம்பருக்கு ஒரு போட்டோ வந்திருக்கிறது. அதனை ஓபன் செய்த அந்த கணவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

அதில், தனது மனைவியின் ஆபாச புகைப்படம் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது. 

ஆனால், அந்த போட்டோவில் இருப்பது உண்மையில் தனது மனைவி அல்ல என்றும், ஆனால், வேறு ஒரு பெண்ணின் உருவத்தில் முகம் மட்டுமே கட் பண்ணி, தனது மனைவியின் முகம் CG பண்ணப்பட்டு இருக்கிறது.

அத்துடன், அந்த போட்டோவில் ஒரு நிர்வாணமான பெண்ணின் படம் இருந்துள்ளதும், அதில் முகம் மட்டும் அவரது மனைவியின் படம் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும், அந்த ஆபாச போட்டோவை சித்தரித்து அனுப்பிய அந்த கும்பல், அந்த கணவரிடம், “இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க, பணம் வேண்டும்” என்று, மிரட்டி உள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த அப்பாவி கணவன், சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்திய நிலையில், “தனது மனைவியின் புகைப்படத்தை, அந்த கணவன் வாட்ஸ்ஆப் DP -யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வைத்திருந்ததை, சில மர்ம நபர்கள் அதனை எடுத்து நிர்வாண பெண்ணின் உடலுடன் ஒட்டி ஆபாச புகைப்படம் போல் சித்தரித்த அனுப்பி வைத்து, பணம் கேட்டு மிரட்டியது” கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இது தொடர்பாக போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், “பொது மக்கள் யாரும் வாட்ஸ்ஆப் DP -யில் குடும்ப பெண்களின் போட்டோக்களை வைக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தி உள்ளனர். இச்சம்பவம், சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment