2 வது கணவனுக்கு தனது மகளை, தாயே விருந்தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் நடந்த இப்படியான அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் தான், அந்த கொடூரத் தாய் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அடுத்து உள்ள கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண், தனது கணவர் கோபாலகிருஷ்ணன் உடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அந்த பெண் குழந்தை, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் நிலையில், தற்போது அந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது.

இப்படியான சூழலில் தான், மகேஸ்வரியின் கணவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து உள்ளார்.

இதனையடுத்து, மகேஸ்வரி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இதனையடுத்து, மகேஸ்வரி அந்த பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்ட நிலையில், இரண்டாவதாக ராஜா உடன் தற்போது வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், மகேஸ்வரிக்கும், அவரது முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகளான சிறுமியுடன், மகேஸ்வரி ராஜாவுடன் வசித்து வருகிறார்.

அதே நேரத்தில், அந்த பெண் மகேஸ்வரி, அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். 

அத்துடன், மகேஸ்வரியின் 15 வயது மகள், அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே நேரத்தில், மகேஸ்வரியின் 2 வது கணவன் ராஜா, அந்த பகுதியில் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். ஆனால், இந்த ராஜா கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். 

இப்படியாக, இவர்கள் 3 பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், மகேஸ்வரி வேலைக்கு சென்ற நேரம் பார்த்து வீட்டில் தனியாக இருக்கும் அந்த 15 வயது சிறுமியை, தந்தை ஸ்தானத்தில் இருந்த ராஜா, கடந்த சில நாட்களாகவே மிரட்டி மிரட்டி அடிக்கடி ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்.

ஆனால், தனது மகளை தனது 2 வது கணவன் ராஜா, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவது மகேஸ்வரிக்கு தெரிந்திருந்த நிலையில், இது குறித்து துளியும் அதிர்ச்சி அடையாத தாய் மகேஸ்வரி, இதனை கண்டும் காணாதது போல் இருந்திருக்கிறார்.

அதே நேரத்தில், அந்த சிறுமியை பாலியல் பலாகத்காரம் செய்யும் போதெல்லாம், “இது பற்றி வெளியில் சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன்” என்றும், அவர் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், அந்த பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, “தாயின் இரண்டாவது கணவர், நம்மிடம் தவறாக நடப்பதை கண்டும் காணாதது போல் நமது தாயார் இருக்கிறாரே, தனது தாயை நினைத்து மனம் வருந்தி நொந்துகொண்ட அந்த சிறுமி, இது குறித்து தனது உறவினர்களிடம்” கூறி, அழுதிருக்கிறார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த அந்த சிறுமியின் உறவினர்கள், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை அழைத்துச் சென்று புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பல்லடம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், இந்த குற்றச்சாட்டு உறுதியான நிலையில், சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சிறுமியின் 2 வது கணவர் ராஜா, சிறுமியின் தாய் மகேஸ்வரி இருவரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.