கல்லூரி மாணவி கதறல்.. “தத்தெத்டுத்து வளர்த்தவர்களே பலாத்காரம்” குடும்பமே வெறிச்செயல்..!

கல்லூரி மாணவி கதறல்.. “தத்தெத்டுத்து வளர்த்தவர்களே பலாத்காரம்” குடும்பமே வெறிச்செயல்..! - Daily news

மாணவியை தத்து எடுத்து வளர்த்து, கல்லூரி வரை தற்போது படிக்க வைத்து ஆளாக்கியவர்களே, குடும்பமாக சேர்ந்து அந்த கல்லூரி மாணவியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் வகையில், இந்த பாலியல் கொடுஞ் செயல் குற்றம் அரங்கேறி இருக்கிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவி, தனக்கு நேர்ந்த இந்த கொடுமைகள் குறித்து சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாராக கொடுத்து இருக்கிறார். 

பாதிக்கப்பட்ட அந்த மாணவி அளித்த அந்த புகாரில், “எனக்கு நேர்ந்த கொடுமைகளை வாழ்க்கையில் எந்த பொண்ணும் சந்திக்கக்கூடாது” என்று கேட்டு உள்ளார். 

“நான் சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் தற்போது முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் பிறந்தவுடன் எனது தாயார் இறந்து போனார். அடுத்து, எனது தந்தையும் காலமானார். எனக்கு உடன் பிறந்த ஒரு சகோதரி, 2 சகோதரர்கள் அப்போது இருந்தாலும், அவர்களால் என்னை வளர்க்க முடியாமல், பிறந்து ஒரு மாதம் ஆனவுடன் என்னை தத்து கொடுத்து விட்டார்.

அப்போது, சென்னை பகுதியை சேர்ந்த ஷெரீப் மற்றும் அவரது மனைவி ஜமீலா ஆகியோர் தான், என்னை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். எனக்கு நினைவு தெரிந்த வரையில் அவர்களைத்தான் நான் தாய் - தந்தையாக பார்த்ர் வந்தேன். அவர்களும் என்னை பாசத்தை காட்டி, அப்படிதான் வளர்த்து வந்தார்கள். அவர்களுக்கு மொத்தம் 3 மகன்கள் உள்ளனர்.

அவர்களுக்கு பெண் குழந்தை இல்லை, அதனால் அவர்கள் என்னை தான் மகளைப் போல வளர்த்து வந்தனர். நான் சிறு வயதாக இருக்கும்போது, சென்னையில் பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்த்து என்னை படிக்க வைத்தனர்.

இந்த நிலையில், எனக்கு தற்போது 17 வயது ஆகிறது. சென்னையில் சிறப்பாக பேசப்படும் ஒரு பெண்கள் கல்லூரியில் தான் தற்போது சேர்ந்து படிக்க தொடங்கினேன். 

இப்படி, நான் வளர்ந்து, பருவம் அடைந்த பிறகு தான் எனக்கு எனது வீட்டில் நான் நினைத்துக்கூட பார்க்கா அந்த கொடுமைகள் எல்லாம் நடந்திருக்கிறது. 

அதன் படி, கடந்த 2020 ஆம் ஆண்டு வரை என்னை மகளாக வளர்த்த எனது தந்தை 64 வயதான ஷெரீப், எனக்கு முதலில் பாலியல் தொல்லை கொடுத்து, அதன் தொடர்ச்சியாக, என்னை பாலியல் பலாத்காரம் செய்து, என்னை சீரழித்தார். 

அப்போது, அவர் என்னை மிரட்டியதால், இதனை நான் யாரிடமும் வெளியில் சொல்லாமல் பயந்துக்கொண்டு இருந்தேன்.

அதன் தொடர்ச்சியாக, அவரது மகனும் எனது அண்ணனுமான 34 வயதான இம்தியாசுக்கு, என் தந்தை ஷெரீப் என்னோடு பாலியல் உறவில் இருப்பது தெரிந்து, என்னை மிரட்டி மிட்டியே அவரும் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த விசயம் எனது தந்தையின் அடுத்த மகன்களான 29 வயது இர்பானுக்கும் தெரிய வந்து, அதன் தொடர்ச்சியாக அவரது தம்பி 26 வயதான அனீப்க்கும் தெரிய வந்ததால், அவர்கள் அனைவரும் என்னை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். 

இப்படியாக, எனது தந்தையின் 3 மகன்களும் திருமணம் ஆனவர்கள். என்றாலும், சில நேரங்களில் ஒரே நாளில் என் தந்தை உட்பட அவரது மகன்கள் 3 பேர் என ஒரே நாளில் 4 பேரும் என்னை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில், நான் கர்ப்பமடைந்த நிலையில், இவர்களது பாலியல் வெறியின் வலி தாங்க முடியாமல் நான், எனது தாயார் ஜமீலாவிடம் எனக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதேன். 

இதனைக் கேட்டுக்கொண்ட அவர் 'அனைத்து விசயங்களும் எனக்கு தெரியும். அவர்களின் இஷ்டப்படி நடப்பது தான் உனக்கு நல்லது' என்று,  கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், என்னை சமாதானப்படுத்தினார்.

இந்த சூழலில் நான் கர்ப்பம் அடைந்தேன். இதனையடுத்து, எனது தந்தை ஷெரீப், வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவுமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்து உள்ளார்.

அதன் பிறகும், தந்தை - அண்ணன் என்று, அவர்கள் 4 பேரும், அதே மாதிரியான உறவில் என்னை தினமும் பயன்படுத்திக்கொண்டே வந்தனர்.

இந்த நிலையில் தான், நான் எனது சொந்த சகோதரியிடம் நான் அன்றாடம் அனுபவித்து வரும் பாலியல் அவலங்கள் குறித்து போனில் கூறி கதறி அழுதேன். அவர் எடுத்த முயற்சியின் பலனாகவே இந்த விசயம் தற்போது காவல் நிலையம் வரை வந்திருக்கிறது” என்று, தனது வாக்கு மூலத்தில் அந்த கல்லூரி மாணவி தெரிவித்து இருக்கிறார்.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த மாணவிக்கு தற்போது 17 வயது ஆவதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தந்தை ஷெரீப், அவரது மனைவி ஜமீலா, மகன்கள் இம்தியாஸ், இர்பான் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். 

அத்துடன், தற்போது தலைமறைவாக இருக்கும் மற்றொரு மகன் அனீப்பை கைது செய்யும் விதமாக, அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தற்போது அவரது சொந்த சகோதரியின் பாதுகாப்பில் போலீசார் ஒப்படைத்து உள்ளனர். இச்சம்வம், சென்னையில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment