சென்னையில் மின்சார ரயில் சேவை தடை இல்லாது வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயிவே அறிவிப்பு

தமிழ்நாட்டில் தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாது மழைபெய்துவருகிறது

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. தொடர் மழை எதிரொலியால், ரயில் சேவை விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால், ரயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.கனமழை காரணமாக சென்னையில் இன்று மின்சார ரயில் இயங்குமா? என்று பயணிகளிடையே குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், கனமழையால் தடைப்பட்டு இருந்த மின்சார ரயில் சேவை இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.