தீபாவளியன்று  அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தேன். கால தாமதமாகிவிட்டதால் காவல்துறை அனுமதிக்கவில்லை. மறுநாள் அனுமதி கிடைத்ததால் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன் என ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லிக்கொள்ளும் மைசூரை சேர்ந்த பிரேமா.

perma 

தீபாவளியன்று  கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த பிரேமா எனும் பெண், ஜெயலலிதா நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவர், தான் ஜெயலலிதாவின் மகள் என்று தெரிவித்தார். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர். 

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளியான இன்று எங்க அம்மாவிடம்  ஆசிர்வாதம் வாங்க வந்தேன். ஆனால், என்னை உள்ளே விடவில்லை என்று கூறிய அவர் நான் மைசூரில் பிறந்தேன்.என்னுடைய பெயர் பிரேமா சென்னையில் தான் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஜெயலலிதாவின் மகள் நான் தான் என்பதை நேரம் வரும்போது ஆதாரத்துடன் நிரூபிப்பேன் 4-5 நாட்களில் சசிகலாவை சந்திக்கவுள்ளேன் என்னை வளர்த்த பெற்றோர் உயிரிழந்துவிட்டனர் என்னை பேபி என்று செல்லமாக ஜெயலலிதா அழைப்பார்.

அப்போலோ மருத்துவமனையில் அம்மா அனுமதிக்கப்பட்ட போது பின் வாசல் வழியாக சென்று சந்தித்தேன். ஜெயலலிதாவின் உதவியாளர் முத்துசாமி என்பவர் என்னை அழைத்தார். அப்போது ஜெயலலிதா எனக்கு முத்தம் கொடுத்தார் ஒரு முறை போயஸ் கார்டன் இல்லத்திலும் அம்மா ஜெயலலிதாவை  சந்தித்துளேன்.

மேலும் அவரிடம் செய்தியாளர்கள், இவ்வளவு தினங்கள் இல்லாமல் ஏன் இன்று என்று கேள்வி எழுப்பியதற்குப் பதில் அளித்த அவர், அதற்கு  சில காரணங்கள் இருக்கிறது  அரசியல் பற்றியும் கட்சியை பற்றியும் தற்போது எதுவும் சொல்ல முடியாது கூடியவிரைவில் என்னைப்பற்றியும் அரசியல் பற்றிய விளக்கம் வரும் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.