தொடர் மழை காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் மொத்தம்  23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் இரு தினங்களாக இடை விடாமல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், சென்னையில் உள்ள சற்று தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு முற்றிலுமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

அத்துடன், தாழ்வான பகுதிகளில் தேங்கி உள்ள மழை நீரை வெளியேற்றுவதற்கான, பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதே போல், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ,விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கன முதல், மிக கனமழை பெய்து வருகிறது. 

மேலும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி ,திண்டுக்கல், திருப்பூர், கரூர் ,நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

இந்த கன மழையா்ல ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியாளர்களால் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். 

மேலும், பொது மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. 

அதே நேரத்தில், “இன்றைய தினம் சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழையும்,  புதுக்கோட்டை, ராமநாதபுரம் ,மதுரை ,தேனி, திண்டுக்கல் ,திருப்பூர், கரூர், திருச்சி, நீலகிரி ,கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்” என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மேலும், கடந்த சில நாட்களாக இந்த மாவட்டங்களில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருவதால், அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பியதும், மழையால் சாலையில் சில இடங்களில் மழை நீரும் தேங்கி உள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஏற்கனவே 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன மழை காரணமாக சென்னையைத் தொடர்ந்துகள்ளக்குறிச்சி,வேலூர், நாமக்கல், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இவற்றுடன், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்றைய தினம் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

அதன் படி, கடலூர், விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர். ராணிப்பேட்டை, மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
வேலூர், திருப்பத்தூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலுக்கும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, தஞ்சை, திருவாரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.